18/09/2021

மூட்டு வலி, மூட்டு தேய்மானம், முடக்கு வாதம் ஆகியவற்றில் இருந்து தப்பிக்க...

 


1. பருப்பு வகைகள், பால், தயிர், புளிப்பு கூடாது.

2. மலச்சிக்கல் இருக்கக் கூடாது; நிறைய பழங்கள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் உண்க .

3. நிற்கும் அமரும் நடக்கும் முறை நேராக இருக்க வேண்டும்.

4. சுண்ணாம்புச் சத்து (கால்சியம்) குறைபாடு நீக்குக.

5. உணவில் முடக்கறுத்தான், அரைக்கீரை, வாதநாராயணன் கீரை சேர்க்கவும்.

6. உருளைக் கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைகிழங்குச் சாற்றையும் அருந்தலாம்.

7. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

8. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து ஒருநாளைக்கு இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

9. வெதுவெதுப் பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தைப் போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும்.

10. ஒரு தேக்கரண்டி குதிரை மசால் என்னும் கால் நடை தீவன விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டித் தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று முறை அருந்தலாம்.

11. இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் இடவெளி விட்டு மீண்டும் மூன்று வாரங்கள் குடிக்கவும்.

12. ஒரு தேக்கரண்டி பாசிப்பருப்பை இரண்டு பூண்டுப் பற்களுடன் வேகவைத்து நாளொன்றுக்கு இருமுறை சாப்பிடுக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.