முன்னோர்கள் நம் உடலை மூன்று வகையாக பிரித்து விளக்கியுள்ளனர்.
1) பரு உடல் 2) நுண்ணுடல் (astral body ) 3) காந்த உடல் ( causal body ).
1)பரு உடல் என்பது செல்களால் ( cell ) ஆனது. பல விதமான தனிமங்களால் ஆனது . பல செல்கள் இணைந்த கூட்டு அமைப்பு உடல்.
2) நுண்ணுடல் என்பது பஞ்ச பூதங்களில் ஒரு பிரிவாக உள்ளது விண் என்னும்
நுண்அனுவாகும். அதுவே உயிர் என்றும்
உயிராற்றல் என்றும் , உயிர் சக்தி என்றும் கூறப்படுகிறது. உயிர் என்பது மிக நுன்னிய பருமனை கொண்டது. சூச்சும நிலையில் நிறைந்து ஓடுவதால் அதனை சூச்சும சரீரம் என்று அழைக்கிறோம். உயிரிலிருந்து வெளிபடும் உயிர்துகள் தான் சூக்கும உடல்.
3). காந்த உடல் என்பது நுண்ணிய
இறைதுகளால் ஆனது. ஒவ்வொரு
இறைதுகளும் தன்னை தானே மிக வேகமாக சுற்றி கொண்டு இருக்கிறது. எப்போதும் விண்ணிலிருந்து இறைதுகள் வெளியேறி கொண்டே இருக்கிறது .
அவ்வாறு வெளியேறும் காந்த அலை சீவ காந்தம் ஆகும் . சீவ காந்த களத்தையே காரண உடல் என்றும், பிரணவ உடல் என்றும் , காந்த உடல் என்றும் அழைக்கிறோம். உயிரிலிருந்து. வெளியாகும் ஜீவ காந்த ஆற்றலே இத்தனை வேலைகளையும் நடத்துகிறது.
கூடு விட்டு கூடு பாய்வது எப்படி ?.
சுவாதிஷ்டானம் மற்றும் மணிபூரகத்தில்
மனதை வைத்து தவம் செய்யும்போது
கூடுவிட்டு கூடு பாயலாம்.
இதற்கான சூச்சும முறையை மறைமுகமாக சித்தர்கள் பாடலில் சொல்லி இருக்கிறார்கள். இதன்
இரகசியத்தை அறிவது கடினம். உயிரை
உடலை விட்டு பிரிக்கும் கலை மறைந்தே
போய்விட்டது.
யோகத்தில் உயர்ந்த வெற்றி கூடு விட்டு
கூடு பாயும் செயல் தான். கூடுவிட்டு
கூடுபாயும் நுட்பம் தெரிந்து கொண்டால்
உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும்.
பிரகாமியம் - கூடுவிட்டுக் கூடுபாய்தல் நினைத்தவர் முன்னால் உடனே தோன்றுதல். இது அட்டமா சித்திகள் ஒன்றாக கருதபடுகிறது.
விபத்தாலோ அல்லது கொலை செய்தாலும் மீண்டும் இறந்த உடலில் புகுந்து உயிர் பெற்று வந்துவிடலாம். இறப்பு உடலுக்கு நிகழ்ந்தாலும் உயிருக்கு நிகழ்வதில்லை. உடலில் உயிர் இருக்கும் போது தான் உயிரில் வலி உண்டாகிறது.
எல்லாம் நன்மைக்கே...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.