27/10/2021

Dear Ladies...

 


காரம், sweet ஒழுங்கா செய்ய தெரிஞ்சா அடுப்பு சட்டியில் கைவைங்க. அடுத்த வீட்டில் செய்றாங்க அதனால் நானே தான் செய்வேன்னு அடம் பிடிக்காதீங்க.

ஒரு எட்டு போனா Adayar Ananda Bhavan கடை வச்சு இருக்கான். இல்ல இரண்டு எட்டு போனா Nellai Lala Sweet காரன் sweet கடை வச்சு இருக்கான்.

தீபாவளிக்கு லீவு ரெண்டு நாள் தான். புருஷன்கிட்ட போய் அந்த கடையில் கல்ல மாவு வாங்கிட்டுவா, அப்பதான் முறுக்கு மஞ்சளா வரும், இந்த கடையில் அரசி வாங்கிட்டுவா அப்ப தான் கலர் வெள்ளையா, ௫சியா இருக்கும்னு டார்சர் செய்யாதீங்க.

முக்கியமா, ஏங்க... இங்க வாங்க இந்த முறுக்கு புழிய கஷ்டமா இருக்கு, அந்த மைசூர்பா கிண்ட குஷ்டமா இருக்குனு husband-ஐ டார்ச்சர் செய்யாதீங்க... please.

முக்கியமா எதை செஞ்சாலும் இது எப்படி இருக்குனு சொல்லுங்கனு... புருஷனை லேப் எலியா மாத்தாதீங்க. 

என்ன இருந்தாலும் வீட்டில் செய்யும் பலகாரம் போல வருமானு வீக் எண்ட் முழுதும் வீட்டை அதகளம் செய்யாம சமத்தா புருஷன் சொல்லும் ஐடியாவை கேட்டு நிம்மதியா தீபாவளியை enjoy செய்யுங்க. 

முக்கியமா ஊர்பட்ட முறுக்கை சுட்டு வச்சிட்டு வாரம் பூரா சாம்பாருக்கு தொட்டு சாப்பிட சொல்றது ஏல்லாம் டூமச்...

தீபாவளியை enjoy செய்ய ஆயிரம் வழி இருக்கு. பலகாரம் செஞ்சு அந்த அடுப்பு சட்டியிலே டைம் waste செய்னு நரகாசூரன் கூட சொல்லல. Okyaa?

குறிப்பு : முக்கியமா நீங்க சுட்ட பலகாரத்தை எல்லாம் உங்க நண்பனுக்கு தான் இன்னும் கல்யாணம் ஆகலையே அவருக்கு கொஞ்சம் கொடுங்கனு கொடுத்து அனுப்பாதீங்க பீளிஸ்... 

அவங்களையாவது நிம்மதியா இருக்க விடுங்க... ஏனா உங்க பலகாரத்தை எல்லாம் சாப்பிட்டா நிரந்தரமா கல்யாணமே வேண்ணாம்னு நினைச்சுடுவாங்க...

இப்படிக்கு...

பலகாரத்தால் பாதிக்கப்பட்ட & பாவம்பட்ட கல்யாணமான ஆண்கள் சங்கம் & சிங்கிள்ஸ் சங்கம்...

😔😔😔😔

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.