20/07/2017

தமிழர் வரலாறா ? சிறு கூட்டத்தின் வரலாறா - 1...


குமரிகண்டம்...

குமரிகண்டம் என்ற கருத்தியல் அனைத்து ஆய்வாளர்களாலும் பேசப்படுகிறது. குமரிகண்டத்தில் இருந்தது தமிழர்களே என அனைவரும் பேசுகிறார்கள். இலக்கியத்தில் ஆதாரம் இருக்கிறது என சொல்லுகிறார்கள்... நான் எப்போதும் நம்புவது வாழ்வியல் ஆதாரங்களை மட்டும் தான். ஏனெனில் வாழ்வியல் ஆதாரங்கள் தான் உண்மைதன்மை அதிகமாக இருக்கும். கல்வெட்டு மற்றும் நாணயத்தில் இருக்கும் மொழிகளை வைத்து பகுத்து ஆராய்ந்து பார்த்தல் என்பது இன்றைய கிருத்தவம் தமிழில் அழகாக பைபிளை வைத்து மக்களை வழிபாட்டை மாற்றுவது போல் தான்.இன்னும் இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் தமிழில் கிருத்தவ போதனைகள் இருந்தது எனவே கிருத்தவம் தமிழர் மதம் என சொன்னால் எப்படி நம்பத்தன்மை இருக்காதோ அதே போல தான் இலக்கியங்கள் கல்வெட்டுகள் நாணயங்கள்...

இப்போது விடயத்திற்கு வருவோம்... குமரிகண்டத்திற்காக வாழ்வியல் சான்று தமிழ்நாட்டில் எந்த சமூகத்திடம் இருக்கிறது என தேடுவோம்.

ஒரு குறிப்பிட்ட ஒரு சிறுகூட்டம் மட்டுமே கடல்கோளால் தாங்கள் அடைந்த துன்பத்தை இதுவரை தங்கள் வாரிசுகதையாக கடத்தி வருகிறார்கள்.

மேலும் அவர்கள் தான் இப்போதுவரை தாங்கள் கடல்கோளால் அழிந்து விடக்கூடாது என்பதற்காக மேட்டு நிலப்பகுதியில் வீட்டை கட்டியதாக சொல்கிறார்கள். அந்த வீடுகளும் தரையில் இருந்து 5 அடி உயரமாக கட்டப்பட்டுள்ளது.

உங்கள் வீடுகள் ஆதியில் எப்படி இருந்தது ?

உங்கள் வாழ்வியலில் ஏதும் சான்று இருக்கிறதா ?

இல்லையல்லவா ? அப்படியிருக்கையில் ஒரு சிறு கூட்டத்தின் வரலாறு எப்படி குமரிகண்ட தமிழர் வரலாறு ஆனது ?

காத்திருங்கள் இது வெறும் ஆரம்பம் தான்....

செய்தி - விருத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.