20/07/2017

நான்தான் முதலில் எழுதினேன். நான் மட்டும்தான் எழுதினேன். ஒரு சட்டமன்ற உறுப்பினர் அறுபது நாள் சட்டப்பேரவைக்கு வராமல் இருந்தால் அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியைப் பறிக்க விதிமுறைகள் இருக்கிறது...


அதனால் அறுபது நாட்களுக்கு மேலாக சட்டப்பேரவைக்கு வராத, வர இயலாத கருணாநிதியின் உறுப்பினர் பதவியை பறிக்க வேண்டும்...

ஆனால் நேற்று தமிழக சட்டப்பேரவையில்  இந்த திமுக மாற்றுமதிமுக இருவரும் என்ன செய்து இருக்கிறார்கள். சட்டமன்றம்  வருவதற்கு கருணாநிதிக்கு விதிவிலக்கு அளிக்கக்கூறி திமுக தீர்மானம் கொண்டுவர, அதை ஆதரித்து அதிமுகவும்  வாக்களித்து தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள்.

எத்தனை அநியாயமிது. ஸ்டாலினுக்கு எந்த அளவுக்கு புத்தி கெட்டு போய் இருந்தால், ... பதவி வெறி இருந்தால்... இப்படியொரு தீர்மானம் கொண்டு வந்திருப்பார். அதுவும் அதிமுகவின் ஆதரவோடு  கொண்டு வருகிறார் என்றால், அதிமுகவிடம்  இவர் பொறுக்கித் தின்கிறார் என்பது உண்மையாகி விடுகிறதே. சசிகலா சிறையில் சலுகை கேட்கிறார் என்று குற்றம் சாட்டுவதற்கு என்ன அருகதை இருக்கிறது. இவர் கேட்பது சலுகை அல்லாமல் வேறு  என்ன?

கருணாநிதி  சட்டப்பேரவைக்கு வராமல் இருப்பதற்கு விதிவிலக்கு கேட்கிறார்களே, கருணாநிதிக்கு சட்டமன்ற உறுப்பினருக்கான சம்பளம் வாங்குவதற்கு விதிவிலக்கு கேட்கிறார்களா என்றால் அது இல்லை. சம்பளம் மட்டும் வேண்டும். ஆனால் சட்டமன்றத்துக்கு வரமாட்டார். என்ன கதைடா உங்கள் கதை..

கருணாநிதி ராஜினாமா செய்து விடுவதால் அவருக்கு சம்பளம் வராமல் போய் விடாது. மாறாக கை நிறைய பென்ஷன்  வரும். சம்பளப்பணத்துக்கு நாயாய் அலையும் ஸ்டாலினை தெரியாமல்தான்  கேட்கிறேன், சாகும் வரையில் உன் அப்பா சம்பளமே வாங்கிக்கொண்டு இருந்தால், அவரது பென்சன் பணத்தை எப்போது வாங்குவது. அவர் சேது விட்டால் பென்சன் கிடைக்காதே,  அப்போது என்ன செய்வீர்கள்... நாளையே கருணாநிதி செத்து விட்டாலும்கூட, 'அவர் செத்த பின்னரும்  திருவாரூருக்கு அவர்தான் அடுத்த சட்டமன்ற தேர்தல் வரையில் சட்டமன்ற உறுப்பினர்'  என்று தீர்மானம் நிறைவேற்றிக் கொள்வீர்களா ?

கருணாநிதியை நீக்கி விட்டு,தேர்தல் நடத்தி இன்னொரு திமுக- காரனே கூட அங்கே வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆகி வர  முடியும். அதை ஏன் ஸ்டாலின் தடுக்கிறார். அறிவுள்ள(!)   திமுக-காரன் எவராவது இதை  யோசிக்க வேண்டாமா ? செயல் தலைவர் என்று எப்போது தன்னை ஸ்டாலின் அறிவித்துக்கொண்டாரோ அப்போதே கருணாநிதி செயலிழந்து போனார் என்று அவரே ஒப்புக்கொண்டார் என்று தானே அர்த்தம்.

இனி என்ன இருக்கிறது ? சட்டப்பேரவைக்கு வராமல்  இருக்க விதிவிலக்கு கோரும்  தீர்மானங்களை நிறைவேற்றிக்கொண்டு, இனி எடப்பாடி, பன்னீர் செல்வம், ஸ்டாலின், ஜெயக்குமார். விஜயபாஸ்கர்   கூட சட்டப்பேரவைக்கு வராமல் சம்பளம் வாங்கிக்கொள்ளலாம். யார் கேட்கப் போகிறார்கள்.

திருவாரூர்  தொகுதி மக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பிணத்தைக் கட்டிக்கொண்டு மாரடிக்க வேண்டியது தான். அலலது இந்த தீர்மானத்தை எதிர்த்து திருவாரூர் மக்கள் வழக்கு தொடரவேண்டும்.

ஜெயலலிதா பிணத்தைக் கட்டிக் கொண்டு அதிமுக-காரனும் கருணாநிதி பிணத்தைக் கட்டிக் கொண்டு திமுக-காரனும் அழுகிறார்கள். இவர்களைக் கட்டிக் கொண்டு நாம் அழுதுக் கொண்டு இருக்கிறோம். தமிழ் மக்கள் தான் யோசிக்க வேண்டும். இனியாவது யோசிக்க வேண்டும். இந்த பிணங்களை அரசியலால் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். இல்லையேல் நாமும் பிணமாக வேண்டியது தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.