20/07/2017

சிந்து வெளிநாகரீகம் தமிழர் உடையதா? சிறு கூட்டத்தாருடையதா - 3...


நகரத்தாருக்கும் சிந்துவெளி மக்களுக்கும் தொடர்பு...

நகரத்தாருக்கும், சிந்துவெளி மக்களுக்கும் தொடர்பிருக்கலாம், என, தமிழக அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர், மா.சந்திரமூர்த்தி கூறினார்.

தமிழக அரசின் தொல்லியல் துறை சார்பில், 'நாட்டுக்கோட்டை நகரத்தார் மரபும், பண்பாடும்' என்ற தலைப்பில், திங்கள் பொழிவு, சென்னையில் நடந்தது. இதில், தமிழக அரசு தொல்லியல் துறையின் முன்னாள் துணை இயக்குனர், மா.சந்திரமூர்த்தி பேசியதாவது: நகரத்தார், காஞ்சிபுரத்தில் இருந்து, சோழ நாட்டுக்கு வந்து இருக்கலாம். அவர்கள், பூம்புகாரிலிருந்து, பாண்டிய நாட்டிற்கு சென்றது குறித்து, பல கருத்துக்கள் உள்ளன. பூவந்தி சோழன், நகரத்தார் பெண்களை விரும்பியதால், கி.பி., மூன்றாம் நுாற்றாண்டிலும்; 10ம் நுாற்றாண்டில் ஏற்பட்ட சுனாமியின் போதும், பிரிவு பிரிவாக சென்றிருக்க வாய்ப்புள்ளது. நகரத்தார், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்து செழிப்புற்றதால், அரசர்களுக்கே கடன் வழங்கியும், முடிசூட்டியும் வைத்துள்ளனர். சோழநாட்டில் இருந்து, 8,000 பேர், புதுக்கோட்டை மலைக்கு சென்றனர். அது, நகரத்தார் மலை என்றும், நார்த்தாமலை என்றும் அழைக்கப்படுகிறது. பாண்டியர்கள், வறண்ட நிலத்தை, நகரத்தாருக்கு வழங்கினர்.

ஆனால், அவர்கள் மத்தியில் நிலவிய சுனாமி பயத்தால், 10 அடி உயரத்துக்கு மேல் வீடுகளை அமைத்தனர். நீரை சேமிக்கும் வகையில், படிப்படியான ஆழத்தில் குளங்களையும், வீட்டுக்குள் மழைநீர் சேமிப்பு இடங்களையும் அமைத்தனர்.பல்லவ, பாண்டிய, சோழ மன்னர்களின் வீழ்ச்சிக்கு பின், சிற்பிகள் உள்ளிட்ட கலைஞர்கள் நகரத்தாரிடம் தஞ்சம் அடைந்தனர். அவர்களால், புதிய கட்டடகலை, சிற்பக்கலை பாணி உருவானது. அது, சிந்துவெளி கலைப்பாணியை ஒத்துள்ளது. அவர்களின் உடல் அமைப்பும், சிந்துவெளி மக்களை ஒத்துள்ளது.
அவர்கள் சிந்துவெளி மக்களின் வழித்தோன்றலாக இருக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

(இத்தனை நாள் எப்படியெல்லாம் ஏமாற்றி விட்டீர்களடா?  இதையெல்லம் வெளி சொன்னவுடன் தானே என்னை எதிர்த்து கூச்சலிடுகிறீர்கள்).

இதுவரை தமிழர் வரலாறுனு சொன்ன அத்தனையும் இந்த சிறுகூட்டத்தின் வரலாறு தானே?

அப்படியெனில் நீங்கள் அவர்கள் கொடுக்கும் எச்சை காசுக்கு தானே வேலை பார்க்கிறீர்கள்?

செய்தி - விருத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.