11/10/2017

சென்னையில் எஸ்.ஐ.யாக களமிறங்கினார் திருநங்கை யாஷினி...


சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சட்டப்போராட்டத்துக்கு பின்னர் சப்-இன்ஸ்பெக்டரானார். சென்னையில் சில மாதங்கள் பயிற்சி எடுத்தார் யாஷினி, தற்போது சூளைமேடு காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றுள்ளார்.

தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதைத் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த யாஷூனியை எழுத்துத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று சீருடை பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, எழுத்துத்தேர்வு மற்றும் உடல் தகுதி தேர்வு ஆகியவற்றில் வெற்றி பெற்றார்.

இதையடுத்து சென்னையில் உள்ள போலீஸ் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார் யாஷினி. சில மாதங்கள் அவர் தீவிர பயிற்சி செய்தார். இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில், சென்னை சூளைமேடு காவல் நிலையத்தில் சஸ்-இன்ஸ்பெக்டர் பணி பிரித்திகா யாஷினி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் திருநங்கை உதவி ஆய்வாளர் என்று பெருமையை பெற்றுள்ளார் யாஷினி.

வாழ்த்துக்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.