11/10/2017

தமிழில் ஒரு தொலைக்காட்சி, அமித்ஷா மகனின் ஊழல் குறித்தான செய்தியை விவாதிக்க அழைத்து, திடீரென தலைப்பை கைவிட்டதாக சுமத் சி ராமன் பதிவு செய்திருக்கிறார்...


இது ஒரு ஊடகத்தின் பிரச்சினை மட்டுமல்ல. அதற்குப் பின்னுள்ள லாபி, மிரட்டல் நாம் கவனிக்க வேண்டியதாகும்.

ஆங்கிலத்தில் எந்த தொலைக்காட்சிக்கும் இந்த தலைப்பில் விவாதிக்க தைரியம் இல்லையா என ராஜ்தீப் சர்தேசாய் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு முன் ஒரு உண்மையை அவர் இணைத்து வெளிப்படுத்தியிருந்தார். இந்தியா டுடே தொலைக்காட்சி, ஊழல் செய்தியை  விவாதிக்க முடிவு செய்த போது பாஜக தரப்பில் யாரையும் அனுப்ப மாட்டோம் என்று தெரிவித்ததாகவும். பாஜகவின் தரப்பு வாதத்தை முன்வைக்க யாரையும் அனுப்பவில்லையென்றால் எப்படி இரண்டு தரப்பையும் பதிவு செய்வது என்று கேட்டிருந்தார்.

இது தனியான ஒரு சம்பவம் அல்ல. அதானி குழுமத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்கள் சலுகை கொடுத்த செய்தியை வெளியிட இ.பி.டபிள்யூ இதழின் எடிட்டரை மிரட்டினார்கள்.

இப்போது அதானி ஊழல் ஆஸ்திரேலியா வரை அறிந்த செய்தி. இந்திய மக்களுக்கு அவை மறைக்கப்பட, பகீரத முயற்சிகள் நடக்கின்றன.

வெளியில் தெரியாத பல மிரட்டல்கள் வரும் நாட்களில் வெளிவரலாம். மதவெறியை வைத்து திசை திருப்புவது, நாட்டி வளங்களை ஒரு சிலர் கொள்ளையடிக்க அனுமதிப்பது. செய்திகளை மிரட்டல் மூலம் தடுப்பது. தேவையெனில் கொலை, வன்முறைகள் நிகழ்த்துவது.

அறிவிக்கப்படாத அவசர நிலையும், அதிகார மறைவில் ஒரு சிலரின் கொள்ளையும் என 'குஜராத் மாடல்' இந்தியா முழுக்க ஜெக ஜோதியாய் அமலாக்குகிறார்கள்.

ஆனால் இப்போது அவர்களின் தொடை நடுக்கம் வெளியே அப்பட்டமாய் தெரிகிறது. அதனால்தான் மிரட்டலில் தொடர்ந்து இறங்கி ஒவ்வொரு விவாத நிகழ்ச்சிகளாகக் கூட முடக்க நினைக்கிறார்கள்.

மெய்யான தேச பக்தர்கள், பாஜகவை அம்பலப்படுத்தி விரட்டியும் அடிப்பார்கள். நிச்சயம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.