17/11/2017

மீண்டும் ஆரம்பம் ஜாக்டோ-ஜியோ போராட்டம்...


ஜேக்டோ- ஜீயோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில்  ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. ஜேக்டோ ஜியோ போரட்டத்தில் ஈடுபட்ட பொறுப்பாளர்கள் மீது அரசு எடுத்துள்ள பழிவாங்கும் நடவடிக்கையை உடனடியாக இரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.

2.  இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய முரண்பாடுகளை களைந்து மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மற்றும் படிகள் வேண்டும்.

3. பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் இரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட  குழு  அறிக்கையை 30.11.2017க்குள் தவறாமல் பெற்று பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமுல்படுத்திடவேண்டும்.

4. இதுவரை காலமுறை ஊதியம் வழங்கப்படாத சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், பகுதிநேர ஆசிரியர்கள் போன்றோருக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

5. 8வது ஊதியக்குழுவில்  வழங்க வேண்டிய 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி. 24.11.2017 அன்று மாலை 5 மணியளவில் வட்டத் தலைநகரங்களில் மாபெரும் கோரிகை ஆர்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் லட்சக்கனக்கான ஆசிரியர்-அரசு ஊழியர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்
அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து 1.12.2017 அன்று நடைபெற உள்ள ஜேக்டோ ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.