17/11/2017

எகிப்து- சூடான் எல்லைப்பகுதிக்கு நானே ராஜா- இந்தியரின் அதிரடி நடவடிக்கை...


எகிப்து – சூடான் எல்லையை ஒட்டி பிர்தாவில் (Bir Tawil) 2 ஆயிரத்து 60 சதுர கிலோ மீட்டர் கொண்ட நிலப் பகுதி உள்ளது. இந்த நிலப்பகுதியை எந்த நாடுமே உரிமை கொண்டாடாத நிலையில், அங்கு சென்ற மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் சுயாஷ் தீக்சித் என்பவர், பிர்தாவிலை ’கிங்டம் ஆஃப் தீக்சித் நாடு’ என அறிவித்துள்ளார்.

கிங்டம் ஆஃப் தீக்சித் நாட்டிற்கு தானே அரசன் என பிரகடனப்படுத்திக் கொண்ட அவர், தனது நாட்டுக்கு தேசியக்கொடி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மேலும், இந்த நாட்டில் குடியேற  விரும்புபவர்கள் முதலில் செடி நடவேண்டும் என சட்டம் இயற்றியுள்ளார்.

தனது நாட்டை அங்கீகரிக்குமாறு ஐ.நாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.