04/01/2018

இது பாஜக விதைத்த வினை...


சாதிக் கலவரங்களால் மராட்டியம் எரிந்து கொண்டிருக்கிறது.

ஏன் எரிகிறது?

இது பாஜக கற்றுக் கொடுத்த இனவாத, சாதிவாத அரசியலின் விளைவு.

வரலாற்றில் எப்போதோ நடந்த வெற்றி- தோல்வி நிகழ்வுகளை எல்லாம் இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வது பாஜகவின் வழிமுறை. தந்திரம்.

இந்திய வரலாற்றில்
ஏதோ ஒரு கால கட்டத்தில்
ஏதோ ஒரு ராஜபுத்திர மன்னன்
ஏதேனும் ஒரு முஸ்லிம் அரசனை
ஏதோ ஒரு போர்க் களத்தில்
வென்றிருப்பான் அல்லது கொன்றிருப்பான். அது நடந்து பல நூற்றாண்டுகள் ஆகியிருக்கும்.

ஆனால் அந்த ராஜபுத்திர மன்னனின் வெற்றியை ஏதோ இந்துக்களின் வெற்றி என்பதுபோல் ஒரு பிம்பத்தைக் கட்டமைத்து, அதற்கு விழா எடுத்துக் கொண்டாடுவது எல்லாம் பாஜகவின் ஸ்டைல்.

மராட்டிய மாநிலத்திலுள்ள தலித்துகள் பாஜகவின் இந்த வழியை அப்படியே தாங்களும் பின்பற்றப் போக வெடித்தது கலவரம்..

கலவரத்துக்குப் பின்னணி என்ன?

200 ஆண்டுகளுக்கு முன்பு புனே மாவட்டத்தில் பேஷ்வாக்கள் எனும் உயர்சாதிப் பிரிவைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருந்திருக்கிறது. அப்போது நடைபெற்ற ஒரு போரில், பிரிட்டிஷ் படையில் இருந்த மஹார் எனும் தலித்துகள் வீரத்துடன் போராடி பேஷ்வாக்களின் கொட்டத்தை அடக்கி, வெற்றி பெற்றார்களாம்..

அதனுடைய 200ஆவது வெற்றி தினத்தை இன்று கொண்டாடுகிறார்களாம்..

பாஜகவின் அரசியல் உத்திதான் இது என்றாலும்..

தலித்துகளின் வெற்றி தினக் கொண்டாட்டத்தைக் கடுமையாக எதிர்த்துக் களத்தில் இறங்கிய இந்துத்துவ சக்திகள் தலித்துகளின் மீது தாக்குதல் தொடுக்க...

வெடித்தது கலவரம்...

இது பாஜக விதைத்த வினை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.