04/01/2018

இயற்கை மீட்சி பெற காடுகள் உருவாக முறையான வழி...


நம்மை சுற்றி இருக்கும் அனைத்தையும் நம் கண்களில் வழியே கல், மரம், மண், விலங்கு, பொருள் என ஒவ்வொரு பரிமாணத்தில் பார்க்கிறோம்.

இதை உயிருள்ளவை, உயிரற்றவை என பிரித்து வைத்து உள்ளோம்.

அனால் இங்கு அனைத்தும் ஒரே பரிமாணத்தில் தான் உள்ளன. அவை அதிர்வலை என்னும் பரிமாணத்தில், நாமும் அதிர்வலைகளாகவே உள்ளோம், ஆனால் நொடிக்கு நொடி நம் வெவ்வேறு அலைகளை உண்டாக்குகிறோம் நம் புலன்கள் உணர்வதற்கு தகுந்தாற்போல்.

ஒரு கோணத்தில் சொல்ல வேண்டுமெனில் இங்கு அதிர்வலைகளை மட்டுமே உள்ளது.

இதையெல்லாம் எதற்க்காக சொல்கிறேன் எனில் நம் நிலை என்னவென்றே தெரியாமல் சிலர் ஊதும் புல்லாங்குழல் அதிர்வலை பின்பு செல்லும் எலிகளாகவே உள்ளோம்.

இந்த அடிமை ஓட்டத்தில் இருந்து விடுபட இயற்கையை மீட்சி செய்யவேண்டும், காடுகளை உருவாக்க வேண்டும்.

அதற்கு முதலில் அதிர்வலைகளான நம்மை நம் அலைவரிசையை ஒழுங்குப்படுத்தும் நுட்பம் அறிய வேண்டும்...

காலையில் தூங்கி எழுந்திருக்கும் போதும் இரவில் உறங்க போகும் போதும் உங்கள் இரு உள்ளங்கைகளை ஒன்று சேர்த்தால் பிறை போன்று ரேகை தெரியும் (heart line) இந்த ரேகைதான் நம் இதய அதிர்வை ஒருங்கிணைக்கும் இடம் இதை பார்த்து மனதார இயற்கை மீட்சி பெற வேண்டும் காடுகள் உருவாக வேண்டும் என நினையுங்கள்.

இதன் மூலம் இதய அதிர்வை ஏற்படுத்தும் போது உங்கள் சிந்தைனையும் அப்படியே அதிர்வலைகளை ஏற்படுத்தும் சுருக்கமாக சொல்ல போனால்  நீங்கள் அதுவாகவே அதிர்விர்கள். இதை ஒவ்வொருவரும் செய்யும்போது ஒரே மாதிரியான மிகவலிமையான அதிர்வலை சுழற்சி ஏற்ப்படும்.

நீங்கள் தினமும் காலையிலும், இரவிலும் இதை செய்யும் பொழுது அது சுழற்சி முறையில் உயிர்பித்து கொண்டே இருக்கும்.

இதை மட்டுமே செய்யுங்கள் நிச்சயம் காடுகள் உருவாகும் மிக விரைவில் வணிகம் முற்றிலும் ஒழியும்.

இன்று முழுநிலவுநாள் இதை அனைவரும் இன்று இரவு சரியாக 8 மணி அளவில் செய்வோம்..

நிச்சயமாக இதை மட்டுமே நினைக்க வேண்டும் உள்ளங்கைகளை சேர்த்து இதய ரேகையை பார்த்து இயற்கை மீட்சி பெற வேண்டும் காடுகள் உருவாக வேண்டும்.

காடுகளையும் இயற்கையும் மீட்டேடுப்போம்..

முடிந்த வரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்......

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.