18/01/2018

நேற்று ஜிக்னேஷ் மேவானி-பத்திரிக்கையாளர்கள் பிரச்னையில்....


இதுவரை பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடத்தாத நரேந்திர மோடியை எதிர்த்து இவர்கள் இப்படி செய்வார்களா என்று பல பதிவுகளை பார்த்தேன். மோடி வரையில் ஏன் போக வேண்டும்? எச்.ராஜாவுக்கு எதிராக என்ன செய்து கிழித்துவிட்டோம்?

அசௌகர்யமாக கேள்வி கேட்ட பல ஊடகவியலாளர்களை சமூக விரோதி என்று அந்த சந்திப்புகளின் போதே திட்டியிருக்கிறார் ராஜா. நாம் சும்மாதானே இருந்தோம்?

கடந்த வருடம் மார்ச் மாதம் தஞ்சாவூரில் நடந்த ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு பத்திரிக்கையாளர் விவசாய நெருக்கடி பற்றி ராஜாவிடம் கேள்வி எழுப்பினார். அவரை தேசத் துரோகி, மோடி எதிரி என்று வசை பாடியதோடு “எவ்வளவு வரி கட்டியிருக்கிறீர்கள், அதை திருப்பித் தந்து விடுகிறேன்” என்று மிரட்டினார் ராஜா. அதன் பிறகு தமிழக ஊடக சூழலில் ஒரு சிறு அதிர்வு கூட ஏற்படவில்லை.

தஞ்சாவூரில் (அநேகமாக) ஒரு தமிழ் பத்திரிக்கையாளருக்கு அவமானம் நேர்ந்தால் அது எச்.ராஜாவின் சுதந்திரம். சென்னையில் தன்னை வன்மத்தோடு தொடர்ந்து வரும் ஒரு தொலைகாட்சிக்கு பேட்டி தரமாட்டேன் என்று சொன்னால் அது ஜிக்னேஷ் மேவானியின் திமிர். எவ்வளவு மேட்டிமைத்தனம் நம்மிடம்?

நம் அதிகாரம், சுதந்திரம் எல்லாம் ஜிக்னேஷ் மேவானியை மட்டுமே புறக்கணிக்க உதவும். எச்.ராஜாவின் நிழலை கூட தொடாது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.