15/02/2018

இந்தியா வும் சுதந்திரமும்...


1947 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு இங்கிலாந்திடம் இருந்து சுதந்திரம் கிடைத்ததெல்லாம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான், ஆனால்...

இந்தியா இன்னும் இங்கிலாந்து க்கு கீழ் தான் செயல் படுகிறது (அ) எலிசபெத் ராணி நம் நாட்டை மறைமுகமாக ஆளுகிறார் என்னும் கருத்தை நான் முன் வைத்தால், உங்களில் சிலர் நம்புவீர்களா..?

இதை நான் சொல்வதற்கு சில ஆதாரங்கள் காரணங்கள் பல இருக்கிறது..

அதை இரத்தின சுருக்கமாக கூறுகிறேன்..

இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுப்பதற்கு முன்  பல நிபந்தனைகள் போடப்பட்டது, அதில் இந்தியா என்றும் British common wealth மையத்தின் கீழ் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் ஒன்று.

பின்னாளில், British common wealth என்னும் பெயர் சர்ச்சையை ஏற்படுத்தலாம் என்பதற்காக "common wealth nations" என்று பெயரை திருத்தி வைத்தார்கள்.

இந்த common wealth அமைப்பில் 52 நாடுகள் இருக்கின்றன, இதற்கு தலைமை எலிசபெத் அம்மையார்.

இப்போ, எங்கள் பக்கத்தில் ஒரு மூன்று நான்கு எடிட்டர் இருக்கிறோம் , என்ன தான் நங்கள் சுதந்திரமாக எழுதினாலும், மீம்ஸ் போட்டாலும், எங்களுக்கு அட்மின் ஒருவர் தலைமை வகுக்கிறார்..

நாங்கள் அட்மின் க்கு கீழ் தான் செயல் படுகிறோம், என்று கூறலாம்.

அதுபோல என்ன தான் வெவேறு நாடாக இருந்தாலும், சுதந்திரமாக இருந்தாலும்
காமன்வெல்த் அமைப்பில் இருக்கும் 52 நாடுகளையும் எலிசபெத் தான்  மறைமுகமாக ஆளுகிறார்.

அதில் சிறிதாய் இருக்கும் சில நாடுகளை மட்டும் நேரடியாக ஆளுகிறார்.

காமன்வெல்த் என்னும் அமைப்பு
நவீன கால பிரிட்டிஷ் காலனி என்றும் கூட கூறலாம்.

1992 ஆம் ஆண்டு எலிசபெத் இந்தியா
வந்தார்..

இவ்வருகை எலிசபெத்க்கு கீழ் தான் இந்தியா உள்ளது என்னும் கருத்தை உறுதிப்படுத்தும் படி அமைந்தது.

உங்களுக்கு தெரியும் நாம் வெளிநாட்டை சுற்றிப்பார்பதற்கோ அல்லது அங்கு வேலை செய்வதற்கோ நமக்கு விசா வேண்டும்.

விசா (அ) நுழைவானை என்பது குறிப்பிட்ட ஒரு அந்நிய நாட்டிற்கு செல்வதற்கோ அல்லது அங்கு தங்குவதை அணுமதிக்கும் ஓர் ஆவணம் ஆகும்.

ஆனால் நம் சொந்த நாட்டில் தங்குவதற்கு, வருவதற்கு விசா தேவையில்லை.

இதே அடிப்படையில் தான் எலிசபெத் அவர்கள் நம் நாட்டிற்கு விசா இல்லாமல் வந்தார்.

(அல்லது இப்படி கூறலாம்,)

இதே அடிப்படையில் தான் எலிசபெத் அவர்கள் , அவர் ஆளும் நாட்டிற்கு விசா இல்லாமல் வந்தார்.

இவ்வளவு ஏன் நமது தேசிய கீதமே
எலிசபெத்தின் புகழ் பாடுவதை தான் எழுதப்பட்டது என்னும் ஒரு கருத்து வேற உலாவுகிறது.

சட்டப்படி எலிசபெத் க்கு கீழ் இந்தியா உள்ளது என்பதற்கு ஆதாரங்கள் குறைவாக தான் இருக்கிறது.

ஆனால் , உங்களில் பலர்க்கு தெரியும் இந்தியாவை மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளை corporate company தான் ஆட்டி படைக்கிறது என்று.

அதாவது ஒரு நாட்டின் பல்வேறு அசைவுகளுக்கும் , விளைவுகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் பின்னால் ஒரு corporate company இருக்கும்.  (தனி ஒருவன் படம்)..

அது போல் நம் நாட்டில் உலாவரும் பெரிய கம்பெனிகளுக்கெல்லாம் தலையானது..


Hindustan unilver ltd என்னும் கார்பொரேட் கம்பெனி..

Hindustan unilver கம்பெனி யை பற்றி சொல்ல ஆரம்பித்தால், இப்பதிவு இன்னும் நீளமாக போகும்.

அக்கம்பணியை பற்றி  பார்த்தவுடன் புரிந்து கொள்ள கீழ்  உள்ள படத்தை காணுங்கள்.

ஆக இப்பதிவை படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் hindustan unilver இன் தயாரித்த ஒரு பொருளையாவது உபயோக படுத்திக் கொண்டிருப்பீர்கள்.

hindustan என்னும் பெயர் கொண்டதால் அது இந்திய கம்பெனி என்று நினைக்கலாம்.

ஆனால் hindustan unilver கம்பெனி uniliver என்னும் பன்னாட்டு கம்பெனி யின் கீழ் செயல் படுகிறது.

ஆனால் uniliver கம்பனியே Crown properties என்னும் கம்பெனி க்கு கீழ் மறைமுகமாக செயல் படுகிறது.

அந்த crown properties க்கு தலைமை யார் என்று பார்த்தால்.... வேற யாரு நம்ம எலிசபெத் அம்மையார் தான்....

இப்பொழுது மேலே  போட்டிருக்கும் பதிவை படியுங்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.