15/02/2018

காவல்துறையில் புடவை வியாபாரம்...


வேலூர் சரக டிஐஜியாக இருப்பவர், வனிதா ஐபிஎஸ்.  இவர் கடந்த வாரம், ஆரணி காவல் ஆய்வாளரை அழைத்து, பட்டுப் புடவைகள் வேண்டும் என்று கேட்டுள்ளார். 

அவரும், மாதிரி பட்டுப் புடவைகளை அலுவலகத்துக்கே வந்து அடுக்கியுள்ளார்.  அவற்றில் ஒரு பத்து புடவைகளை எடுத்துக் கொண்டு தேங்ஸ் என்று அனுப்பி விட்டார். 

கடைக்காரருக்கு எப்படி பணம் தருவது என்று ஆய்வாளர் யோசித்துக் கொண்டிருக்கையிலேயே, திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி பொன்னிக்கு இந்தத் தகவல் தெரிகிறது.  அவரும் பட்டுப் புடவைகளை ஆர்டர் செய்கிறார்.  எஸ்பி கேட்கும்போது ஆய்வாளர் என்ன செய்ய முடியும். அவரிடமும் புடவைகளை அடுக்கியிருக்கிறார். 

இவரும் கணிசமான புடவைகளை எடுத்துக் கொண்டு, தேங்ஸ் கூறியுள்ளார். 

இரண்டு பேரும் சேர்ந்து ரெண்டே முக்கால் லட்சத்துக்கு புடவை எடுத்துள்ளார்கள். 

இப்போது, ஆரணி ஆய்வாளர் மாமூல் வாங்குகிறார் என்று நாம் குறை கூற முடியுமா ?

இதில் வேடிக்கை என்னவென்றால், இரு அதிகாரிகளும், கணிசமான நேரம் காவல்துறை சீருடையிலேயே இருக்க வேண்டும் என்பதுதான்.  இதில் இவர்களுக்கு பட்டுப் புடவை கட்ட, எப்படி சூழல் ஏற்படும் ? 

பிறகு எதற்கு இந்த அற்பத்தனமான ஆசை ?

இதுக்கு மேல பேசினா ஆணாதிக்கவாதின்னு முத்திரை குத்திடுவாங்க. இந்த அளவுல நிறுத்திக்குவோம்.

படம் : இடது பக்கம், பொன்னி ஜெயலலிதாவிடம் கல்பனா சாவ்லா விருது பெறுகையில்.  வலது புறம் இருப்பவர் டிஐஜி வனிதா...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.