18/03/2018

மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் காவி ஹிந்துத்துவா தீவிரவாதிகள் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர் அடங்கிய அசீமானந்தாவின் வாக்குமூலம் நீதிமன்றத்தில் இருந்து மாயம்...


2007 ஆம் ஆண்டு மே மாதாம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜூம்மா தொழுகையின் போது நடைபெற்ற மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 58 பேர் படுகாயமடைந்தனர்.

இதன் பின்னர் நடைபெற்ற போராட்டத்தின் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்த மேலும் பலர் உயிரிழந்தனர். இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது தான் தான் என்றும் அதில் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு உள்ள பங்கு குறித்தும் சுவாமி அசீமானந்தா வாக்குமூலம் அளித்திருந்தார். இவர் அளித்த வாக்குமூலம் அடங்கிய ஆவணம் கீழ் நீதிமன்றத்தில் இருந்து மாயமாகியுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இது தலைமை விசாரணை அதிகாரி மற்றும் சிபிஐ எஸ்பி T.ராஜா பாலாஜி அவரது ஆதாரங்களை பதிவு செய்த போது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு NIA விற்கு மாற்றப்படுவதற்கு முன்பு இவ்வழக்கு தொடர்பாக முதல் குற்றப்பத்திற்கை தாக்கல் செய்தவர்.

தற்போது இந்த வழக்கின் முக்கிய ஆவமனான அசீமானந்தா வாக்குமூலம் மாயமானது குறித்து பாலாஜி தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு பக்கங்களை கொண்ட “Memo of Disclosure” No88 என்று NIAவினால் குற்றப்பத்திர்கையில் குறிப்பிடப்பட்ட இந்த ஆவணத்தில் இந்த குண்டு வெடிப்பு தொடர்பான சதித்திட்டங்கள் குறித்தும் அதில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பங்கு குறித்தும் அவர்களின் பெயர் குறிப்பட்டு அசீமானந்தா தெரிவித்திருந்த தகவல்கள் அடங்கியிருந்தது.

மேலும் இந்த ஆவணம் அசீமானந்தா மற்றும் இந்த வழக்கில் ஆர்எஸ்எஸ் இன் தொடர்பை உறுதி செய்ய மிக முக்கியமான ஆவணம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த குண்டு வெடிப்பு விசாரணையின் ஒரு பகுதியாக பாதிக்கப்பட்டவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் உட்பட 160 க்கும் மேலான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். இதில் சிபிஐ விசாரித்த 68 சாட்சியங்களில் DRDO விஞ்ஞானி வட்லாமணி வெங்கட் ராவ் உட்பட 54 பேர் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது கூடுதல் மெட்ரோபொலிடன் செஷன்ஸ் நீதிபதி K.ரவீந்தர் ரெட்டி, இந்த வழக்கு தொடர்பான பல ஆவணங்கள் மாயமானத்தை குறிப்பட்டு நீதிமன்ற அதிகாரிகளை கடுமையாக சாடினார். அதில் சிலவற்றை கண்டு பிடிக்க நீதிமன்ற அலுவல்கள் சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதப்படுத்தப்பட்டது.

2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அசீமானந்தா ஹைதராபாத் மற்றும் செகுந்தராபாத் ஆகிய பகுதிகளை விட்டு செல்லக்கூடாது என்ற அடிப்படையில் அசீமானந்திற்கு பிணை வழங்கப்பட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.