18/03/2018

உ.பி : லக்னோ நோக்கி அணி வகுக்கும் விவசாயிகள் – பீதியில் பாஜக ஹிந்துத்துவா தீவிரவாதி யோகி ஆதித்யநாத்...


லக்னோ, மகாராஷ்டிரா மாநிலத்தை தொடர்ந்து, உத்திரபிரதேசத்தில்  விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி லக்னோ நோக்கி நடை பயணமாக அணிவகுப்பை தொடர்வது என முடிவு செய்திருக்கின்றனர். அதன்படி இன்று மாநிலத்தின் 60 மாவட்டங்களில் இருந்து பேரணிக்காக குவியத்துவங்கியுள்ளனர்.

அகில இந்திய விவசாயிகள்  சங்கத்தின் தலைமையில் உத்திரபிரதேசத்தில்  உள்ள விவசாயிகள் செங்கொடியேந்தி தங்களது உரிமைகளை மீட்டெடுப்பது என முடிவு செய்திருக்கின்றனர்.

இதற்காக உத்திரபிரதேசத்தில் உள்ள 60 மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தற்போது திரண்டிருக்கின்றனர்.

குறைந்த பட்சம் 22 ஆயிரம் விவாசயிகள் லக்னோ நோக்கிய நடைபயண பேரணியில் பங்கேற்பதாக தெரிவித்திருக்கின்றனர். விவசாய விளைபொருளுக்கு உற்பத்திச் செலவில் இருந்து  ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாய கடன்களை முழுமையாக  தள்ளுபடி செய்யவேண்டும். மின்கட்டண உயர்வு மற்றும் மின்துறையில் தனியார் நிறுவனங்களின் தலையீடு கூடாது, மாடுகளை விற்கவும், வாங்கவும் விதிக்கப்பட்டுள்ள தடைகளை முழுமையாக அகற்ற வேண்டும். 60 வயதைக்கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக ரூ.5ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபயணத்தை மேற்கொள்கின்றனர்.

தற்போது நடைபயணத்தின் ஒரு பகுதியாக பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள், அசோக்தாவ்லே, சுபாஷினி அலி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

இதற்கிடையில் தற்போது இந்த பேரணிக்கு தடை விதிப்பது குறித்து யோகி ஆதித்யநாத் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.