08/03/2018

தலைக்கவசம்: ஒரு விழிப்புணர்வு பதிவு...


சட்டமும், நீதிமன்றங்களும் மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் பல சட்டங்களும், அவ்வப்போது அதில் திருத்தங்களையும் கொண்டு வருகின்றன. அப்படி இயற்றப் படும் சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமானதாக இருந்தால் மட்டுமே வரவேற்பினைப் பெறும் என்பது உண்மை.

 அப்படி ஒரு நடைமுறை சிக்கல்களைக் கொண்ட ஒரு பிரச்சினைதான் இரு ஆண்டுகளுக்கு முன்பு வந்த தலைக்கவசம் குறித்த ஒரு உயர் நீதிமன்றத் தீர்ப்பும் அதனைத் தொடர்ந்த இத்தனை குளறுப்படிகளும்..

போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் காவலர்கள் அதே சட்டத்தில் அதற்கு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றவும் வேண்டாமா? தான் சரியாக இருந்து கொண்டு தானே அடுத்தவர் குறைகளை களைய முடியும்.?

போக்குவரத்து காவலர்கள் (white shirt uniform) மட்டுமே சார்பு ஆய்வாளர் தகுதியில் உள்ள அதிகாரி spot fine  விதிக்க முடியும். சட்டம் ஒழுங்கு காவலர்களில் (காக்கி சீருடை) ஆய்வாளர் தகுதிக்கு குறைந்த அதிகாரி எவரும் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் இல்லை.

ஆனால் நடப்பது என்ன? ஒரு ஏட்டையா இரண்டு இளைஞர் காவல் சிறுவர்களை வைத்துக் கொண்டு, அல்லது ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், அல்லது சார்பாய்வாளர் தனது விருப்பத்திற்கு ஏற்றார் போல அபராதம் தீட்டுகிறார்கள். சராசரி பொது மக்கள் இதனை கேள்வி கேட்க முடியுமா? கேட்டால் அவர்கள் எந்தெந்த வகையில் பொய் வழக்கில் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என்பது அனுபவ பட்டவர்களுக்கு தான் தெரியும்.

தலைக்கவசம் பிடிக்கச் செல்லும் காவலர்களுக்கு அன்றை அன்றைக்கு target இருக்கிறதாம். காவல்துறையா அல்லது மார்க்கெட்டிங் குரூப்பா?

 பெரும்பாலான இளைய தலைமுறையினர் விழிப்புணர்வோடு தற்போது தலைக்கவசம் அணியத் தொடங்கிவிட்டனர். ஆனால் காவல்துறை துரத்தித் துரத்தி அபராதம் விதிப்பது யார் என பார்த்தால் நகர் புறங்களுக்கு அன்றாடம் கூலி வேலைக்கு வந்து செல்லும் கிராம மக்களை தான். (மாநகரங்கள் விதி விலக்கு)

குடிபோதையிலும், தலைக்கவசம் அணியமலும் வாகனம் ஓட்டியதற்காக இதுவரை எத்தனை காவல் துறையினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

இதன் பொருள், அவர்கள் அம்புட்டு நல்லவர்கள் என்பதா?

சரியான கட்டமைப்பு, தரம் கொண்ட சாலைகள் மற்றும் தந்து பாதுகாப்பு குறித்த சுய புரிதல் இல்லாதவரை கட்டாய தலைக்கவசம் நிச்சயம் சாத்தியமில்லாத ஒன்று.

வாகன ஓட்டிகள் ஒவ்வொருவரும் சுய உணர்தல் வரும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது ஒன்றே மாற்றத்திற்கான வழி.

சட்டத்தில் May, Shall எனும் இரு வார்த்தைகள் மிகவும் இன்றியமையாதவை. அந்த வகையில் போக்குவரத்து விதிகளில் உள்ள தலைக்கவசம் என்பது கட்டாயப்படுத்தலாக (shall) இல்லாமல், அறிவுறுத்தும் விதமாக (may) மட்டும் இருந்தால் நலம்.

ஒவ்வொரு காவல்நிலையத்திலும் விசாரணையில்லாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? அதையெல்லாம் விட்டுட்டு.....

என்னங்க சார் உங்க சட்டம்?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.