24/03/2018

கேரளத்தில் தமிழர்களின் நிலை...


தமிழ்நாட்டில் வசதி வாய்ப்பு களோடும், அரசியல் செல்வாக்கோடும் வாழும் மலையாளிகள் போல் கேரளத்தில் நம் தமிழர்கள் வாழ்கிறார்களா?

கடந்த சில ஆண்டுக்கு முன் தமிழகத்தில் ஓணம் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை விட்டதுபோல்  பொங்கல் பண்டிகைக்காக திருவனந்தபுரம் நகரத்திற்கு மட்டும் ஒரு நாள் விடுப்பு கேட்டு கேரள அரசிடம் திருவனந்தபுரத் தமிழர்கள் விண்ணப்பித்தார்கள்.

ஆனால் விடுமுறை கிடையாது என்று கேரள அரசு அறிவித்தது. இதைக் கண்டித்து அங்குள்ள தமிழர்கள் கேரளத் தலைமைச் செயலகத்தின் முன் பொங்கல் வைக்கும் போராட்டத்தினை நடத்தி சிறை சென்றார்கள்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழர்கள் ஒரு காலத்தில் கேரளாவில் பெரும் ஏலக்காய் எஸ்டேட் முதலாளிகளாக இருந்தவர்கள். இவர்களின் கதை பெரும் துயரம் நிறைந்தது.

கேரளாவில் காங்கிரஸ் ஆட்சியானாலும், கம்யூ னிஸ்ட் ஆட்சியானாலும் ஏலக்காய் எஸ் டேட்டிற்குச் சென்று ஒரு ஏக்கருக்கு ஐம்பதாயிரம், ஒரு லட்சம் என்று மிரட்டி பணம் பறித்தார்கள்.

மலையாளி களுக்கு அதிகக்கூலி கொடுத்து கட்டுப் படியாகாததால் விவசாய வேலைக்கு தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களை அடித்து விரட்டினார்கள்.

பிறகு முழுக்க முழுக்க மலையாளிகளையே வேலைக்குச் சேர்க்க வேண்டும் என்று மிரட்டினார்கள்.

இதனால் வந்த விலைக்கு நிலத்தை விற்று விட்டு மீண்டும் தமிழகத்திற்கே வந்து காலம் கழிக்கிறார்கள் நம் தமிழர்கள்.

மலையாளிகள் எந்த அளவிற்கு விழிப்புடனும் ஒரு கட்டுக்கோப்புடனும் திகழ்கிறார்கள் என்பதற்கு மேற்சொன்ன சம்பவங்கள் எல்லாம் சின்னச் சின்ன எடுத்துக் காட்டுகள்தான்.

இதையெல்லாம் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்புப் போருக்காகவாவது தமிழர்கள் தயாராக வேண்டாமா?

அரசியல் சட்டம் வகுக்கப்பட்ட காலத்திலேயே காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்புச் சட்டப்பிரிவான 370 கொண்டு வரப் பட்டது. அதன்படி காஷ்மீரில் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது.

அவரவர் தாய்மொழியில் வரவு செலவு கணக்கெழுதிக் கொள்ளலாம் என்ற சிறப்பு விதியும் வகுக்கப்பட்டது.

இதன்படி இன்று தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் கடைகள் நடத்தி வரும் மார்வாடி, குஜராத்தி, மலையாளிகள் அவர்களின் தாய்மொழியிலேயே வரவு செலவுக் கணக்கு எழுதுவதால் நமது வருமான மற்றும் விற்பனை வரித்துறை அதிகாரிகளுக்கு குழப்பம் ஏற்படுகிறது.

இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட வந்தேறிகள் விற்பனை வருமான வரித்துறையினரை ஏமாற்றி வருகின்றனர். அல்லது லஞ்சம் கொடுத்து சரிக்கட்டுகின்றனர்.

இப்படி பிறமொழியினரின் பொருளாதார ஆதிக்கம் தமிழ் மண்ணில் வேர்பிடித்து நிற்பதை பிடுங்கி எறிய வேண்டுமானால் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்ட 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறி சொத்து வாங்கியவர்களின் சொத்துக்கள் செல்லாது என்று சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் இந்த துணிச்சலான செயலைச் செய்ய முதுகெலும்புள்ள முதலமைச்சரால் மட்டுமே முடியும்.

தமிழனையே தலைவனாகவும், வழிகாட்டியாகவும் ஏற்று வீறு நடை போடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.