24/03/2018

ஆடி அமாவாசையும் தென் அமெரிக்காவும்...

மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்ட மாதிரி இருக்கா? முடிச்சை கட்டவிழ்ப்போம் மெது, மெதுவாக..

முதலாவதாக.. ஆடி அமாவாசை தமிழர்களின் விழா, தமிழர்களின் விழா என்றாலே அது வானியல் விழாதான். இதுவும் ஒரு வானியல் விழாதான்.


1. சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும்.

சூரியனைத் தந்தை என்கிறோம். சந்திரனைத்  தாய் என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் நமது தாய் தந்தை யாகிய வழிபடும் தெய்வங்களாகும்.


சூரியன், சந்திரன் ஒரே ராசியில் இணைவதே அமாவாசை. நம்ம பூமியிலிருந்து பார்க்கும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சூரியன் 12 நட்சத்திரகூட்டங்களில் எதில் நிற்கிறதோ அதுவே ராசி. கீழேயுள்ள படத்தில் 12 படங்களும் நாம் வானில் காணும் நட்சத்திரங்களின் 12 குழுக்கள். அந்த 12 படங்களின் நடுவிலுள்ள கோடு சூரியனின் பாதை. அதாவது பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனுக்கு பின்னாலுள்ள நட்ச்சத்திர குழுக்கள். 12 ராசியும் 12 மாதங்கள்.

12 ராசியில் ஒவ்வொரு ராசியிலும் சூரியன் நிற்கின்ற நேரத்தில் நிலவும் அதே ராசியில் குறுக்கே வந்து சூரியனின் ஒளியை மறைக்கும்போது வருவது அம்மாதத்தின் அமாவாசை. அதன் எதிர்த்திசையில் வந்தால் பௌர்ணமி.

‘அமா’ என்றால், ஓரிடத்தில் பொருந்தியது (சேர்ந்தது– குவிந்தது) என்று பொருள்படும். ஓர் ராசியில் சூரியன், சந்திரன் இருவரும் சேர்ந்து உறவாகும், வாசியான நாள் ‘அமாவாசி’ (New Moon) எனப்படும். நிலா முழுமையாக, பூரணமாகத்  தெரியும் நாள் பௌர்ணமி (Full Moon).  காண்க:


ஒவ்வொரு தமிழ் மாதமும் சூரியன் ஒவ்வொரு ராசியில் இருப்பார். அந்த சுழற்சி முறைப்படி ஆடி மாதம் கடக ராசியில் இருப்பார். அந்த நேரத்தில் தினக்கோளான சந்திரன் கடக ராசியில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை.


 2. இரண்டாவதாக பூமியின் சுழற்சிற்கேற்ப சூரியனின் பயணம் 2 திசைகளில் நடக்கிறது நாம் அறிந்ததே.

1.  தட்சிணாயனம் (வடக்கிலிருந்து தென்திசை நோக்கிய பயணம் = கடக ரேகையிலிருந்து மகர ரேகைக்கு) (Tropic of Cancer to Tropic of Capricorn)

2.  உத்தராயனம் (தெற்கிலிருந்து வடதிசை நோக்கிய பயணம் =  மகர ரேகையிலிருந்து கடக ரேகைக்கு) (Tropic of Capricorn to Tropic of Cancer)


முதல் பயணம் ஆடி மாதத்தில் ஆரம்பிக்கிறது. ஆகவே தட்சிணம் (அ) தெக்கணம் (Deccan) (அ) தென்திசை நோக்கிய சூரியனின் பயணம் ஒரு வானியல் நிகழ்வு விழா.

இந்த ஆடி மாதத்தில் வரும் முதல் அமாவாசை (சூரிய, நிலவு, பூமி சந்திப்பு) ஆடி அமாவாசை சிறப்பானது. இந்த வானியல் நிகழ்வு தமிழர்களுக்கு சிறப்பானது, ஆகவேதான் விழா.

அதே போல சூரியனின் உத்தராயனம் அ மேல் நோக்கிய அ வடக்கு நோக்கிய பயணம் துவங்கும் மாதம் தை மாதத்தில் வரும் அமாவாசையும் தமிழர்களுக்கு வானியல் திருவிழா, தை அமாவாசை என்று. மேலுள்ள படம் மேலும் இதனைத் தெளிவாக்கும்.


3. தர்ப்பணம் செய்தல் என்றால் என்ன?

தர்ப்பணம் எனபது எள்ளுடன் கலந்த நீரை தெற்கு நோக்கி தாரை வார்ப்பது.
வள்ளுவர் வாக்குப்படி தென்புலத்தார் பிறகு தான் தெய்வம் என்றபடி அமாவாசை நாட்களில் முன்னோர்களை வழிபட்ட பின்னரே தெய்வத்தை வழிபட வேண்டும். ஆக நமது முன்னோர் தென்புலத்தில் குறிப்பாக கடல்கோளில் இறந்துபோன குமரிக்கண்ட முன்னோர்கள் தொடங்கி நமது பெற்றோர் (இறந்திருந்தால்) வரை.


4. ஏன் அமாவாசை நாளில் தர்ப்பணம்?

சூரியனைத் தந்தை அல்லது பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனைத்  தாய் அல்லது "மாதுர் காரகன் என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது தாய் தந்தை யாகிய வழிபடு தெய்வங்களாகும். அமாவாசை அன்று நிலவு தென்படுவதில்லை, மறைந்துவிடுகிறது. எனவே மறைந்து போன முன்னோர், பெற்றோரை அந்த நாளில் நினைவு கூறுதல் சிறப்பானது.

ஒவ்வொரு அமாவாசையன்றும் நினைவு கூர்ந்தனர் தமிழர் அதிலும் மிகச்சிறப்பாக வருடத்தின் இரண்டு சிறப்பு அமாவாசை நாட்களில் - தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை.


 5. இறந்தோருக்கும், காகத்துக்கும் என்ன சம்பந்தம்?

காகங்கள் பொதுவாக அதிகாலையில் எழுந்து கரைதல், உணவினை உடனே உண்ணாமல் தன் கூட்டத்தினரை அழைத்து பகிர்ந்து உண்ணல், மாலையிலும் குளித்தல், பிறகு தங்குமிடத்திற்குச் செல்லுதல் போன்றவற்றை வழக்கமாகக் கொண்டவை.


தங்கள் இனத்தில் ஏதாவது ஒரு காக்கை இறந்து விட்டால் அனைத்து காக்கை களும் ஒன்று கூடி கரையும் தன்மையையும் காணலாம். இது அஞ்சலி செய்வதற்குச் சமமாகக் கருதப்படுகிறது..

மேலும் காக்கை சனி பகவானின் வாகனம். அதே போல எமனின் இன்னொரு வாகனமாகவும் கருதப்படுகிறது. காரணம் காரி என்ற சனி கிரகம் பூமிக்கு கிரக ஈர்ப்பின் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.


எருமை எனும் கரிய மிருகத்தை வாகனமாகக்கொண்ட எமன் என்னும் யாமம் அ காலம் என்பதும் நமக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. இரண்டுமே அடிப்படையில் கரிய நிறம் என்பதால் காகம் ஒரு தூதுவராக கருதப்படுகிறது.


இப்போ தென் அமெரிக்காவிற்கு வருவோம்...

தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஏரியின் பெயர் திதிகாக்கா (Titicaca)
திதிகாக்கா ஏரி (ஆங்கிலம்: Titicaca,ஸ்பானிய மொழி: Lago Titicaca)
பொலிவியா மற்றும் பெருவின் எல்லையில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3,812 மீ (12,507 அடி) உயரத்தில் அமைந்துள்ள உலகில் மிக உயரமான கப்பல் செல்லத்தக்க, நன்னீர் ஏரி மற்றும் தென் அமெரிக்காவில் மிகப்பெரிய ஏரி இதுவாகும்.

இந்த ஏரியின் பெயரே நல்ல ஒரு தமிழ்ப்பெயர். திதி மற்றும் காக்கா
உள்ளூர் மொழிகளிலோ, அல்லது இந்த நாட்டை ஆக்கிரமித்த இசுபானிய மொழியிலோ Titicaca என்பதற்கு அர்த்தம் கிடையாது. அதனால தமிழ்னு சொல்லிற முடியாது. ஆனா ஒரு சில அடிப்படைகள் ஆதாரங்கள் மூலம் சொல்ல முடியும்.

1. முன்னோர் வழிபாடு நடந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள் திதிகாக்கா ஏரியில் உண்டு. காண்க:

Bongers, Arkush and Harrower (2012) argue that the funerary towers of the Lake Titicaca basin were constructed to be central areas of ancestor worship as well as demarcate access to resources.

முன்னோர் தோன்றிய இடமே திதிகாக்கா ஏரி. அதனாலேயே அங்கு சூரிய, நிலவு வழிபாடுகள் நடைபெற்றது என்கிறது வரலாறு..

As M.  Reville well remarks, it is obvious that the Inca claim is an adaptation of the local myth of Lake Titicaca, the inland sea of Peru.  According to that myth, the Children of the Sun, the ancestors of the Incas, came out of the earth (as in Greek and African legends) at Lake Titicaca, or reached its shores after wandering from the hole or cave whence they first emerged.  The myth, as adapted by the Incas, takes for granted the previous existence of mankind, and, in some of its forms, the Inca period is preceded by the deluge.

2. தமிழர்களைப்போலவே சூரியன், சந்திரனை மிக முக்கியமாகக் கருதியவர்கள்.

1) சூரியத்தீவு (Island of the Sun)
2) நிலாத்தீவு. (Island of the Moon)


Isla del Sol (Island of the Sun)
Situated on the Bolivian side of the lake with regular boat links to the Bolivian town of Copacabana, Isla del Sol ("Island of the sun") is one of the lake's largest islands. In the religion of the Incas, it was believed that the sun god was born here.


Isla de la Luna (Island of the Moon)
 
Isla de la Luna is situated east from the bigger Isla del Sol. According to legends that refer to Inca mythology Isla de la Luna ("Island of the Moon") is where Viracocha commanded the rising of the moon. Archaeological excavations indicate that the Tiwanaku peoples (ca. AD 650-1000) built a major temple on the Island of the Moon.

3. இதைத்தவிர இந்த தீவுக்கு அருகில் இருந்த நகரத்தின் பெயர் தீவு நாக (Tiwanaku) என்பதுதான். நாகத்தை வழிபட்டவர்கள் இன்கா நாகரீகத்தினர்.

4. இந்த நகரத்தில் பழமையான இரண்டு வாயில்கள் உண்டு.

1) சூரிய வாயில் (Gateway of Sun) கீழே முதலாவதாக உள்ளது. அதன் வாயில் வழியே செல்லும் சூரிய ஒளி படும் 12 தூண்களைக்கொண்டு 12 மாதங்கள், மற்றும் சூரியனின் கடக ரேகை, மகர ரேகை நிலைகள் கண்டுகொள்ள முடியும். அதற்கான படம் இரண்டாவதாக உள்ளது.

2) நிலா வாயில் (Gateway of Moon) மூன்றாவதாக உள்ள படம். Luna என்ற இசுபானிய வார்த்தையின் பொருள் நிலாவே.




5. திதிகாக்கா ஏரிக்கருகில் உள்ள மலையின் பெயரே மேரு மலைதான். (படம் கீழே) நமது மேரு மலையாகிய இமய மலையைப்போல இம்மலையும் அதே பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும் இம்மலை கடவுளின் வாயில் என்றே சொல்லப்படுகிறது இமய மலையைப்போலவே. லெமூரியா கண்டத்திற்கும் இதற்கும் உள்ள தொடர்பை விளக்குகிறது ஒரு குறிப்பு.

There is a legend that says at the time Lemuria was sinking, one of the seven Great Masters of Lemuria (MU), Lord Aramu Meru (Aramu Muru), was given the mission to bring the sacred Golden Solar Disc from the Temple of Illumination to Lake Titikaka for safe keeping.

லோகமாதா என்ற ஒரு நகரமே 2000 வருடங்களுக்கு முன் இருந்ததாக வரலாற்றுக்குறிப்பே இருக்கிறது.

LUKURMATA. - Lukurmata was a secondary site near Lake Titicaca in Bolivia. First established nearly two thousand years ago, it grew to be a major ceremonial center in the Tiwanaku state, a polity that dominated the south-central Andes from 400 to 1200. After the Tiwanaku state collapsed, Lukurmata rapidly declined, becoming once again a small village. The site shows evidence of extensive occupation that antedates the Tiwanakan civilization.


6. மேரு மலை யின் பெயரைத் தாங்கிய பெரு நாட்டின் இன்கா இன அரசர்கள் தங்களை காலனியாதிக்கம் செய்ய வந்த இசுபானியர்களை எதிர்த்து போரிட்டு இறுதியில் மாண்டு போயினர்.

இந்த இனத்தின் கடைசி அரசனின் பெயர் துபாக் அமாரு..


துபாக் அமாரு (TÚPAC AMARU) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார். 1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் எசுப்பானியர்கள் இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.

மீண்டுமாக இசுபானிய காலனி ஆதிக்கத்துக்கு எதிராக இன்னொரு போராளி இதே துபாக் அமாரு II (1738-1781) என்ற பெயரினைத்தாங்கி அடிமைத்தனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய அவரை இறுதியில் ஸ்பானியர்கள் கொடூரமாகக் கொலை செய்தனர். நான்கு குதிரைகளில் 2 கை, 2 கால்களை கட்டி இழுத்து உடலைத் துண்டு துண்டாக்கி கொன்றனர். காண்க:



இன்றும் அதே பெயரில் துபாக் அமாரு புரட்சிகர இயக்கம் (TÚPAC AMARU REVOLUTIONARY MOVEMENT) (MRTA)
1980 முதல் வல்லாதிக்கத்துக்கு, அடிமைத்தனத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

பிறருக்காகவே வாழ்ந்து மரித்த அனைத்து நமது முன்னோர்களை நினைவு கூர்வோம், அவர்கள் போல் வாழ்ந்தும் காட்டுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.