12/03/2018

உஷாவின் மரணத்தில் காவல் ஆய்வாளர் காமராஜை நியாயவான் ரேஞ்சுக்கும், மனைவியை இழந்த கணவர் ராஜாவையே கைது செய்யும் அளவுக்கும் காவல்துறை நண்பர்கள் சிலர் கஷ்டப்படுகிறார்கள்....


காமராஜ் பக்கம் நியாயம் இருந்தால் முதல் ஆளாக அவர் பக்கம் நிற்கலாம், ஆனால் வைக்கும் வாதங்கள் தாங்க முடியாத அளவுக்கு அபத்தமாக இருக்கிறது.

நான் காவல்துறையில் கான்ஸ்டபிள் அளவுக்கு உள்ளவர்கள் சிலர் அறிவுக்கூர்மையை பார்த்து வியந்து போயிருக்கிறேன். அவ்வளவு சட்ட நுணுக்கம் உள்ளது. அப்படிப்பட்டவர்களும் காவல்துறையில் உள்ளனர்.

ஆனால் சிலர் காமராஜை காப்பாற்ற போடும் மெசேஜ்களும் சட்டப்பிரிவுகளும் அவர்கள் அறியாமையை நினைத்து சிரிப்புத்தான் வருகிறது. என்னத்த சொல்ல...வேதனை

வேண்டுமானால் அந்த நண்பர்களுக்கு இப்படி போட்டு முடித்து விடச் சொல்லலாம். காமராஜ் அன்று அங்கே இல்லை, இல்லவே இல்லை.

உஷா வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. வீட்டில் பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டார். அதனால் மரணம்.

3000 பேர் மறியல் செய்ததற்கு காரணம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக, என்று முடித்து விடலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.