10/03/2018

தனியார் மருத்துவமனைகளின் கொள்ளையை அம்பலப்படுத்திய மருந்து விலை நிர்ணைய ஆணைய தலைவர் பூபேந்திர சிங்கை பாஜக மோடி கார்பரேட் அரசு இடமாற்றம் செய்திருக்கிறது...


தனியார் கார்ப்பரேட்  மருத்துவமனைகளின் கட்டண கொள்ளையை ஆதாரத்துடன் அம்பலப்படுத்திய தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் பூபேந்திர சிங்கை மோடி அரசு இடமாற்றம் இடமாற்றம் செய்திருக்கிறது. இது மருத்துவத்துறை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுதில்லியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆத்யா என்ற சிறுமி டெங்கு காய்ச்சலில் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து இந்த சிறுமியை சிகிச்சைக்காக கருவாவ்னில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறுதியில் சிகிச்சை பலனின்றி ஆத்யா உயிரிழந்தார். இந்நிலையில்  போர்டிஸ் மருத்துவமனை சிகிச்சை  கட்டணமாக ரூ 16 லட்சத்திற்கான பில்லை ஆத்யாவின் தந்தை ஜெயந்திடம் வழங்கியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயந் உடனே இதுகுறித்து தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்திடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தலைவர் பூபேந்தர் சிங் தில்லியில் உள்ள நான்கு தனியார் மருத்துவமனை வழங்கி வரும் பில்களை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் பல அதிர்ச்சித்தரும் தகவல்கள் தெரிய வந்தது.

அதாவது மருந்தின் விலையை விட சில மருந்துகளின் விலையை  2 ஆயிரம் மடங்கு அதிக லாபம் வைத்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

மேலும் இந்த மருந்துகளில் மருத்துவமனை நிர்வாகம் நடத்தும் மருந்தகங்களில் மட்டுமே வாங்க வேண்டும் எனவும் கட்டாயப்படுத்தி இருக்கின்றனர். 

குறிப்பாக போர்டிஸ் மருத்துவமனை ஆத்யாவிற்கு சாதாரண மருந்துக் கடைகளில் 500 ரூபாய் விலையில் விற்கப்படும் மெரோலான் எனும் மருந்தை 4,491 ரூபாய் விலையில் விற்றுள்ளனர்.

சிப்லா நிறுவனத்தால் மெரோகிரிட் எனும் வணிகப் பெயரில் தயாரிக்கப்படும் இதே மருந்தின் விலை 3,100 – இதற்கு 65,362 ரூபாய் பில் போட்டுள்ளனர்.

இப்படி பல்வேறு வகையில்
உயிரை காப்பாற்றுவதாக கூறி ஜெயந்திடம் ஈவிரக்கமற்ற முறையில் பணத்தை சுரண்டியிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருந்து விலை நிர்ணய ஆணைய தலைவர் சுபேந்திர சிங் ஆதாரத்துடன் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனையின் கொள்ளையை அம்பலப்படுத்தினார்.

இதனால் ஆத்திரமடைந்த தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் மோடி அரசிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அம்பலப்படுத்திய 10 தினங்களில் மருந்து விலை நிர்ணய ஆணையத் தலைவர் சுபேந்திர சிங்கை இடமாற்றம் செய்திருக்கிறது.

மேலும் ஆணைய தலைவர் பணியிடத்தையே காலியாக வைத்திருக்கிறது. இதனால் அந்த ஆணையம் செயல்படமுடியாமல் 
முடக்கப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே ஆத்யாவின் தந்தை ஜெயந் மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் அறிக்கையை வைத்து தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து அவரிடம் கேட்ட போது  பல்வேறு கார்ப்பரேட் மருத்துவமனைகளின் செல்வாக்கினாலும், அரசியல் செல்வாக்கினாலும்  இதுவரை தனது மனு  விசாரணைக்கே வரவில்லை என்கிறார் ஜெயந்.

ஏற்கனவே மருத்துவிலை நிர்ணய ஆணையத்தின் தலைவர் சுபேந்தர் சிங் தனியார் மருத்துவமனைகள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி தன்னை  இடமாற்றம் செய்யும் என்று தெரிந்தே  தனியார் மருத்துவமனைகளின் அநியாய கொள்ளையை அம்பலப்படுத்தினார் என மருந்து விலை நிர்ணய ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது இந்தீய மக்களுக்கு மிகவும் ஆபத்தான செயல்பாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.