14/04/2018

மெரீனாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி...


2017ம் ஆண்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்னர் மெரீனாவில் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மெரீனாவில் போராட்டம் நடத்தவும், கும்பலாக கூடவும் போலீசார் தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மெரீனாவில் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி அளித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் நிர்வான போராட்டம் போன்று அதீத முறையிலான செயல்களில் ஈடுபடக்கூடாது. மேலும், 90 நாட்களுக்கு போராட்டம் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டது. பொதுமக்ககள் கூடும் இடத்தில் நீண்ட நாட்கள் போராட்டம் நடத்தாமல் குறைத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்த அறிவுரைகளை பெற்று அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி ராஜா தெரிவித்துள்ளார். டில்லியில் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த விநோத போராட்டங்களை கருத்தில் கொண்டு நீதிபதி இவ்வாறு தெரிவித்தார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.