18/04/2018

டிசிடபிள்யூ ஆலையை மூடக்கோரி ஆட்சியரிடம் மனு...


காயல்பட்டினம் நகரில் இயங்கி வரும் டிசிடபிள்யூ தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள் உரிமைநிலை நாட்டல் மற்றும் வழிகாட்டும் அமைப்பு தூத்துக்குடி மாவட்டஆட்சியர்க்கு மனு அளித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் உரிமைநிலை நாட்டல் மற்றும் வழிகாட்டும் அமைப்பு சார்பில் தூத்துக்குடி ஆட்சியர்க்கு அளிக்கப்பட்ட மனுவில் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகரில் இயங்கி வரும் டிசிடபிள்யூ தொழிற்சாலையால் சுற்றுச்சூழல் பெரியஅளவில் பாதிக்கப்பட்டது. பாெதுமக்களும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொழிற்சாலையின் பல்வேறு பிரிவுகள் இயங்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதி காலாவதியாகி விட்டது. இருப்பினும் அனுமதியின்றி காஸ்டிக்சோடா பிரிவு இயங்கி வருகிறது.

மேலும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்கனவே விதித்திருந்த கட்டுபாடுகளான சென்னை ஐஐடி மூலம் சுற்று சூழல் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மற்றும் மதிப்பிற்குரிய ஒரு மருத்துவஅமைப்பு மூலம் உடல்நல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். என்ற விதி முறையும் செயல்படுத்தப்படாமலேயே பிவிசி மற்றும் சிபிவிசி பிரிவுகள் இயங்க அனுமதியளிக்கப்பட்டது. அந்த அனுமதியும் காலாவதியாகிவிட்டது. எனவே சுற்றுசூழலுக்கு பல விதங்களில் கேடு விளைவித்துள்ள டிசிடபிள்யூ தாெழிற்சாலையை உடனே மூட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.