07/05/2018

குறிக்கோள்கள் எவ்வாறு வெற்றியை தீர்மானிக்கின்றன...


குறிக்கோள்கள் இல்லாத வாழ்கைப் பயணம் என்பது இலக்கை நிர்ணயிக்காமல் எய்த அம்பினைப் போன்றது.

நீங்கள் இப்பொழுது கிரிக்கெட் விளையாட்டில் உங்களுக்கு ஆர்வம் உள்ளது என்று முடிவெடுத்துவிட்டீர்கள் என்று எடுத்துக்கொள்வோம்.

அடுத்ததாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களின் ஆர்வம் எந்தத் துறையில் உள்ளது பேட்டிங், பவுலிங் அல்லது இரண்டிலுமா என்பதை தீர்மானிக்க வேண்டும்.

இங்கே தான் நம்மில் பலர் தவறு செய்கின்றனர்.

இலக்குகள் வெற்றியினைத் தீர்மானிக்கின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ஆனால் பலர் நான் சச்சின் டெண்டுல்கர் போல மிக சிறந்த பேட்ஸ்மேன் ஆக வேண்டும் என்று தனது இலக்கிணை தீர்மானிக்கின்றனர்.

நாம் சச்சினைப் போல சிறந்த ஆட்டக்காரராக வரவேண்டும் என்ற இலக்கிணை நிர்ணயிக்கும் போது வெற்றியை நோக்கி நமது இலக்கிணை தீர்மானிக்கின்றோம்.

அது நம்மை தோல்விப் பாதைக்கே அழைத்துச் செல்லும். அவ்வாறு இல்லமால் நம்முடைய இலக்கிணை நம்முடைய செயலில் அதாவது இங்கே கிரிக்கெட் ஆட்டத்தில் வைக்க வேண்டும்.
இலக்கிணை செயலில் எவ்வாறு நிர்ணயிப்பது?

முதலில் இலக்கு என்பது எப்படி இருக்க வேண்டும் என்றால் அது மாறிக்கொண்டே இருக்க வேண்டிய ஒரு தொடர் நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்.

அதாவது நீங்கள் ஒரு மலையினை முழுவதுமாக உடைக்க எண்ணினால் அந்த மலையையே இலக்காக வைத்து செயல்பட்டால் அது உங்களுக்கு மிகவும் பெரிதாக தோன்றி பயத்தினை ஏற்படுத்தும்..

மாறாக நீங்கள் அந்த மலையை கற்களாகவும், சிறு சிறு பகுதிகளாகவும்  இலக்கிணை நிர்ணயித்து உடைத்து வந்தால் உங்களால் அந்த முழு மலையையும் உடைக்க முடியும்.

உதாரணமாக உங்களுக்கு பிடித்த செயலான கிரிக்கெட்டில் நீங்கள் இலக்கிணை எவ்வாறு தீர்மானிப்பது என்று பார்போம்.

முதலில் நீங்கள் சிறந்த பேட்டிங் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும், உங்களைப் போலவே கிரிக்கெட்டில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் அதிகம் விளையாட வேண்டும், அதிக நேரம் பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும், பல மாறுபட்ட சிறந்த பந்து வீச்சாளர்களின் பந்துகளை எதிர்த்து பயிற்சி செய்ய வேண்டும், பல்வேறு தன்மை கொண்ட ஆடுகளங்களில் பயிற்சி மேற்கொள்ள வேண்டும், உடலினை வலிமையாக ஆரோக்யமாக வைத்துக்கொள்ள வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

இப்படி உங்களின் இலக்குகள் முழுவதும் உங்களின் செயலினைத் தொடர்ந்தே இருக்க வேண்டும்.

இலக்கை நோக்கி பயணிக்கும் போது சில சமயங்களில் சிலரின் எதிர்மறை எண்ணங்கள், அல்லது சிறு தோல்விகள் உங்களை சோர்வடைய செய்யலாம்...

அதை பற்றிக் கவலைக் கொள்ளாமல் தொடர்ந்து சென்றால் வெற்றியை அடைந்து விடலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.