12/06/2018

கர்ப்பிணி பெண்ணை 6 கி.மீ சுமந்து சென்ற கிராம மக்கள்...




ஆந்திர பிரதேச மாநிலத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணை 6 கிலோமீட்டர் தூரம் வரை கிராம மக்கள் சுமந்து செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது.

விசாகப்பட்டினத்தில் உள்ள அங்கூ கிராமத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. கர்ப்பிணி பெண்ணுக்கு வலி ஏற்பட்டதை அடுத்து அங்கூ கிராம மக்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். 108 ஆம்புலன்ஸ்க்கு பெண்ணின் உறவினர்கள் போன் செய்தனர். ஆனால், அந்தக் கிராமத்தில் இருந்து முக்கிய சாலைக்கு வருவதற்கு சுமார் 6 கிலோமீட்டர் வரை சாலை வசதி இல்லை என்பதால் வர முடியாது என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்துவிட்டனர்.

ஆம்புலன்ஸ் வரமுடியாது என்று கூறியதை அடுத்து, 6 கிலோமீட்டர் தூரம் கிராம மக்கள் மற்றும் உறவினர்களே அந்தக் கர்ப்பிணி பெண்ணை சுமந்து சென்றனர். குழந்தைக்கு தொட்டில் கட்டுவது போல், போர்வையால் மூங்கிலில் கட்டி தோளில் சுமந்து சென்றனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.