18/06/2018

ரிப்பேருக்கு நிறுத்தின பஸ்ஸை குன்னூருக்கு அனுப்பிட்டாங்க - ஊட்டி விபத்துகுறித்து டிரைவர் பகீர்...


‛‛மனாேகரன் டிரைவர், சி.23368 நம்பர். 2 மாதமா அந்த வண்டியதான் ஓட்டிட்டு இருக்கேன். வண்டி வந்து பால்ட்டுனு நிறுத்திவிட்டு போனோம். ஸ்டியரிங் லாக், கட்டு லாக்கு, டிபுஷ்ஷூல பிரச்னைனு டி.எம் டெஸ்க்கு வரைக்கும் போய், டி.எம் டெஸ்க்குல வேலைக்காக நிறுத்திட்டோம். நாங்க ஸ்பேர் வண்டி எடுத்துட்டு ரூட்டுக்குப் போய்ட்டோம். சாயங்காலம் 6 மணிக்கு போய் வண்டி ரெடியாயிருச்சானு கேட்டாேம். ரெடியாகலனுட்டாங்க. சரி ஒரு மணி நேரமானாலும் பரவாயில்ல, நாங்க வெயிட் பண்றோம்னு, வண்டிய ரெடிபண்ணி தறீங்களானு கேட்டோம். இல்ல ஒரு மணி நேரத்துல ஆகாது, ஆளில்ல. வேல ரெடியாகாதுனுட்டாங்க. இதனால ஸ்பேர் வண்டிய கொண்டு போயாச்சு. மறு நாளைக்கு முன்னமே வந்து காலைல வண்டிய கேக்கும்போது, அது குன்னுார் ரூட்டுக்கு போயிருக்குனுட்டாங்க.

நாங்க ரூட்டு வண்டி எங்களுக்கு குடுங்கனு சத்தம் போட்டாேம், டெக்னிக்கல் ஸ்டாப்  ஐய்யப்பன்கிறவரு இன்சார்ஜா இருந்தாரு. அவர் கிட்ட கேட்டோம். அதாவுது குன்னூருக்குதான் போயிருக்குனு சொன்னாங்க. நாங்க பாேர்ட பார்த்து கேட்டப்ப, இல்ல இது மேட்டுப்பாளையம் போயிருச்சு. நீங்க இந்த வண்டியையே ஓட்டுங்க இன்னிக்கு. நாங்க அப்படி எல்லாம் ஓட்ட முடியாதுனுட்டோம். நாங்க கேக்கும்போது காலை 11 மணி. 11.15 - 11.30 மணி இருக்கும் ஆக்சிடெண்ட்டுனு நியூஸ் வந்திருச்சு. ஊட்டி- தங்காடு- கீழ்குந்தா ரூட்ல ஓடுன வண்டி, ரிப்பேரான வண்டி, சொந்த வண்டி மாதிரி வெச்சிருக்கோம். அந்த வண்டிய, ரெடிபண்ணி குடுங்கனு கேட்டப்ப இல்லனு சொல்லிட்டாப்டி, ``ஸ்டியரிங் லாக், ரைட் சைடு திருப்புனா வண்டி லாக் ஆகுது, ஸ்டெக் ஆகி ரிலீசாகுது, பிரேக்க மிதிச்சுட்டு மறுபடியும் திருப்பினா, ரிலீசே ஆகாதுனா’’

இவ்வாறு  பஸ் விபத்து குறித்து, அந்தப் பஸ்ஸை முன்னதாக இயக்கிவந்த, அரசு பஸ் ஓட்டுநர் மனோகரன் என்பவர் ஒருவருடன் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.