26/06/2018

வேற்று கிரகவாசிகள் கடத்தல் சம்பவம்...


கார்லா டர்னர் (Dr. Karla Turner, PhD)...

அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் வாழ்ந்து வந்த இந்தப் பெண், ஒரு பல்கலைக்கழக பேராசிரியை. 1998ம் ஆண்டு இவர், தனது கணவன், மற்றும் மகன் சகிதம் குடும்பத்தோடு பறக்கும் தட்டில் வந்த வேற்றுக்கிரகவாசிகளால் (ஜின்களால்) கடத்தப் பட்டார்.

அந்த நிகழ்வையொட்டி அவரும் அவரது குடும்பமும் உள ரீதியாக அனுபவித்த சித்திரவதைகள் ஏராளம். ஆனால், பிரச்சினையை எதிர்த்து நிற்கும் தனது தைரியத்தை கார்லா கைவிடவில்லை.

இந்தச் சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து ஓரளவுக்கு மீண்ட பின், தனது கணவனின் முழு ஆதரவோடு கார்லா புதியதொரு பாதயில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தன்னைப் போல் பறக்கும் தட்டுக்குரியோரால் கடத்தப்பட்ட மேலும் பலரை நேரில் சந்தித்து அவர்களது அனுபவங்களையும் தகவல்களாகத் திரட்ட ஆரம்பித்தார்.. அடுத்த கட்டமாக, ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வேற்றுக்கிரகவாசிகளால் கடத்தப்பட்டு, பாலியல் சித்திரவதை உட்பட பல்வேறு சித்திரவதைகளுக்கும் ஆளான, தன்னைப் போன்ற எட்டு பெண்களைத் தேர்ந்தெடுத்து, முறையாக அவர்களை ஆய்வுக்கு உட்படுத்தினார்.

அதே போல் கடத்தப்பட்ட ஆண்களிலும் சிலரை வேறாக எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினார்.

நீண்ட கால ஆய்வுகளுக்குப் பிறகு, தான் திரட்டிய உண்மைகளையும், அவற்றின் மூலம் தான் கண்டறிந்த அதிர்ச்சியூட்டும் பல இரகசிய உண்மைகளையும் தொகுத்து, இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டார். அடிக்கடி உருமாறக் கூடிய ஆற்றல் கொண்ட இந்த வேற்றுக் கிரகவாசி (ஜின்) இனத்தவர்கள், தாம் கடத்திச் செல்லும் மனிதர்களை எப்படியெல்லாம் சித்திரவதை செய்கிறார்கள், எப்படியெல்லாம் தகாத உடலுறவுகளை மேற்கொள்கிறார்கள். அதன் பிறகு எப்படி தொழிநுட்பம் சார்ந்த சத்திர சிகிச்சைகள் மூலம் மனித பெண்களில் கருப்பையில் அவர்களது உயிரணுவால் உருவாக்கப்படும் “கலப்பின” (Hybrid) சந்ததிகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பன போன்ற பல திடுக்கிடும் தகவல்கள் இந்த நூல்களில் விபரிக்கப் பட்டுள்ளன.

Taken (கடத்தப்பட்டோர்) ,
Masquerade of Angels (வானவர்கள் எனும் முகமூடி நடனம்) எனும் பெயர்களில் வெளியிடப்பட்ட அவரது இந்த இரண்டு நூல்களும் இன்றளவும் பல ஆய்வாளர்கள் மத்தியில் மதிக்கப் படுபவை.

இது மட்டுமல்லாமல் கருத்தரங்குகள், உரைகள் போன்ற பல்வேறு ஊடகங்கள் வாயிலாக மக்களை இது குறித்து விழிப்புணர்வூட்டும் விதமாக தீவிரமாக செயல்பட்டார்.

பலரது விழிப்புணர்வுக்கு இவரது அயராத முயற்சிகள் ஒரு மூல காரணமாக அமைந்தன.

இதனால் ஆத்திரமடைந்த “எதிர்த் தரப்பு” இவரை அச்சுறுத்த ஆரம்பித்தது. பல மிரட்டல்கள் இவருக்கு விடுக்கப் பட்டன. இவரது ஆய்வுகளைக் கைவிட வேண்டும் என்று பல மர்ம மிரட்டல்கள் இவருக்கு வந்து கொண்டே இருந்தன. இவ்வாறு வந்த மிரட்டல்களில் சில மிரட்டல்கள் மனிதர்கள் வாயிலாக வந்தவை அல்ல; மர்ம இனத்தவர்கள் மூலம் விடுக்கப்பட்டவை என்று அவரே பிற்காலத்தில் குறிப்பிட்டும் இருந்தார். ஆனால், இது போன்ற மிரட்டல்களுக்கெ
ல்லாம் அவர் அஞ்சவில்லை. தொடர்ந்தும் பிரச்சாரங்களை அதிகப் படுத்தினார்.


விளைவு.... திடீரென்று இனம் புரியாத ஒரு விசித்திர நோயால் இவர் பாதிக்கப் பட்டது மட்டுமல்லாமல், தனது 48வது வயதிலேயே அந்த நோய் மூலம் மரணித்து விட்டார். அவரது கணவர் பிற்காலத்தில் குறிப்பிடும் போது, கார்லாவுக்கு ஏற்பட்டது இயற்கையான நோய் அல்ல; அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்றே குற்றம் சாட்டினார்.

ஆனால், அமெரிக்க அரசாங்கமோ அவருக்கு ஏற்பட்டது வெறும் புற்று நோய் தான் என்று கூறி, கதையை நாசுக்காக நிறைவு செய்து விட்டது. அந்தக் கதையே இன்று பரவலாக நம்பப் பட்டும் வருகிறது.

ஆனால், கார்லா டர்னரின் ஆய்வுகளை முழுமையாகப் பார்த்த எவருமே அரசாங்கம் சொல்லிய விளக்கங்களை ஏற்றுக் கொள்ளவே இல்லை.

உண்மைக்கும், ஜோடிக்கப்பட்ட கதைக்கும் இருக்கும் வித்தியாசத்தை ஆய்வு செய்வோர் இலகுவில் கண்டு கொள்வதுண்டு. அந்த அடிப்படையில் பல ஆய்வாளர்கள் இன்று வரை கார்லாவின் ஆய்வுகளுக்கென்று தனி மரியாதை கொடுப்பதுண்டு. இவரது ஆய்வுகள் பலவற்றுக்கு உறுதுணையாக இருந்த இன்னோரு ஆய்வாளர் தான், Barbara Bartholic எனும் பெண். இவரும் மர்மமான முறையில் ஒரு விபத்தின் வாயிலாக கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.