26/06/2018

துருக்கி என்பது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு, ஆட்டோமான் சாம்ராஜ்யம் என உலகை மிரட்டிய பெரும் வல்லரசின் இன்றைய சுருக்கம் அது...


ஐரோப்பாவின் ஒரே இஸ்லாமிய நாடு அதுதான். அதனால் அதனை ஒட்டோமானின் வீழ்ச்சிக்கு பின் நோயாளி என்றெல்லாம் ஐரோப்பா பழித்தது.

ஆனால் கமால் பாட்சா தன் தியாகத்தாலும் உழைப்பாலும் துருக்கியினை சீர்படுத்தினார், இன்று இஸ்லாமிய நாடுகளில் மிக முன்னேறிய நாகரீகமான நாடு என துருக்கித்தான் முதல் இடத்தில் இருக்கின்றது..

சிரிய அகதிகள் கட்டுபாடு மிகுந்த சவுதிக்கு வராமல் துருக்க்கிக்கு செல்ல காரணம் அதுவே..

அரபுலகின் அமைதிக்கு துருக்கியின் பங்களிப்பும் மகா முக்கியம்..

இந்த எர்டோகன் என்பவர் துருக்கியின் இரண்டாம் கமால் பாஷா என சொல்லிகொண்டு துருக்கியினை பெரும் இடத்திற்கு கொண்டு செல்வேன் என உறுமிகொண்டிருப்பவர்.

இதனால்தான் சர்வ சக்திவாய்ந்த அதிபர் பதவியினை உருவாக்கி அதில் அமர துடிக்கின்றார்.

அந்த முக்கியத்துவம் வாய்ந்த துருக்கி இப்பொழுது தன் முதல் அதிபரை தேர்ந்தெடுப்பதை உலகம் உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.