26/06/2018

நகரவாசிகளுக்கு ஒரு நியாயம்... கிராமவாசிகளுக்கு வேறு ஒரு நியாயமா...?


கோவை காந்திபுரம் மேம்பாலத்தின் இரண்டாவது அடுக்கு மேம்பாலம் அதாவது, 100 அடி சாலை- கிருஷான்ணசாமி சாலை(அய்யப்பன் கோயில் சாலை) -ஆனது 2011 ஆரம்பத்தில் சுரங்கபாதையாக வடிவமைக்கப்பட்டது. சுரங்கப்பாதையாக அமைக்கப்படும்போது சுரங்கப்பாதையை ஒட்டி இருபக்கமும் அணுகுசாலை(சர்வீஸ் ராேடு) அமைக்கப்படவேண்டும். அதற்காக சாலையின் இருபுறமுள்ள கட்டிட ஓனர்களுக்கு நிலஆர்ஜிதம் செய்வதற்காக அறிவிப்பு அரசால் வழங்கப்பட்டது.

 ஆர்ஜித அறிவிப்பு கிடைக்கப்பெற்றவுடன் கட்டிட ஓனர்களெல்லாம் சேர்ந்து ஒரு சங்கம் அமைத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து காந்திபரம் மேம்பால திட்டத்தை செயல்படுத்துவதற்கு தடையாணை பெறுகிறார்கள். அப்போதைய எம்பி நடராஜனும் எம்எல்ஏ சேலஜ்சர் துரையும் கட்டிட. ஒனர்களுடன் சேர்ந்துகொண்டு பாலத்தின் வடிவமைப்பை மாற்ற அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்கள்.

2001-ல் வடிவமைக்கப்பட்ட மேம்பால திட்டம் மூன்று முறை மாற்றப்படுகிறது. சுரங்கப்பாதை 75 அடி உயர மேம்பாலமாக மாற்றப்படுகிறது. 100 அடி சாலையில் வழியாக சென்ற உயரழுத்த மின்காேபுரங்கள் எடுக்கப்பட்டு, மண்ணில் புதைக்கப்பட்டன. அதற்கான செலவு 25 கோடிகள். காந்திபுர மேம்பாலத்திற்காக ஒரு அடி நிலம்கூட தனியாரால் வழங்கப்படவில்லை.  திட்டத்தில் நில ஆர்ஜிதத்திற்காக 20 கோடி ஒதுக்கப்பட்டிருந்தும்  கூட தனியார்கள் யாரும் நிலத்தை முன்வராதததினால் தனியார்களின் நிலம் கையகப்படுத்தப்படமுடியவில்லை 

நகரவாசிகள் தங்களுடைய நிலத்தையும் வீட்டையும் நாட்டின் வளர்ச்சி திட்டத்திற்கு வழங்கமாட்டார்களாம்... ஆனால் கிராமவாசிகள் வளர்ச்சி திட்டத்திற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று விமர்சனம் செய்கிறார்கள்.  நகரின் வளர்ச்சித்திட்டத்திற்கு ஓரடி நிலத்தைக்கூட கொடுக்க மனமில்லாத நகரவாசிகள் கிராம மக்களையும் விவசாயிகளையும் ஏளனம் செய்து விமர்சனம் செய்கிறார்கள். இதுவா நாட்டுப்பற்று... ஏசி வண்டியில் 160 கிமீ வேகத்தில் நான்கு வழிச்சாலை பயணிக்கின்றீர்களே.. அந்த நான்கு வழிச்சாலை முழுவதும் விவசாயிகள் நாட்டுக்காக விட்டுக்கொடுத்த  பூமி என்பதை மறந்துவிடாதீர்...

கிராமத்தில் ஒரு பழமொழி உண்டு..

பழுத்த மட்டையை பார்த்து குருத்து மட்டை ஏளனமா சிரித்ததாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.