25/07/2018

இந்து மதத்தின் அடிப்படை தமிழர் வானியலே - 1...


திரிசூலம் - பிரம்மன், விஷ்ணு, சிவன்:
தமிழர்களின் அறிவியல் - உலக மதங்களின் மூலம். 

தொல் தமிழர்கள் கடவுளை   உருவாக்காதவர்கள். தேவைப்படாததால் சிலைகளை அந்த நம்பிக்கையை வளர்க்காதவர்கள். அவர்கள் கடலோடி மீன்பிடி தொழில் செய்தவர்கள் ஆதலால் வானியல் இயல்பிலேயே ஊறிய விசயமாக இருந்தது. அவர்களின் வானியல் அறிவு பிற்காலத்தில் பிற மதங்களால் உள்வாங்கப்பட்டு, உருமாற்றப்பட்டு, தமிழனின் தலையிலேயே மதங்களாகத் திணிக்கப்பட்டிருக்கிறது. 

அந்நிய ஆரிய (அ) பிராமண மதத்தால் தான் தமிழரின் வானியல் அறிவு, பெருமளவு திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்றாலும், பிற மதங்களும் விதி விலக்கல்ல. ஒவ்வொன்றாய் காண்போம்.

தொடக்க கால தமிழர் சமயம்  6 பிரிவுகளைக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் என்பவையே அந்த ஆறு பிரிவுகள். இவற்றில் நன்கு அறிமுகமான பிரிவுகள் சைவமும் வைணவமும். இந்த ஆறு பிரிவுகளும் ஒன்றோடு மற்றொன்று கலக்கப்பட்டு ஒரே  மதத்திற்குள்ளாக இருக்குமாறு மாற்றப்பட்டுவிட்டது.

1. சைவம் - சிவனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

2. வைணவம் - விண்ணு (அ) விஷ்ணு என்ற திருமாலை முழுமதற்கடவுளாக வழிபடும் சமயம்.

3. சாக்தம் - சக்தி அ பார்வதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

4. காணாபத்தியம் - கணபதியை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

5. கௌமாரம் - குமாரனான முருகனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

6. சௌரம் - சூரியனை முழுமுதற்கடவுளாக வழிபடும் சமயம்.

இவை ஆறு சமயப்பிரிவுகளும் ஒரே மதமாக்கப்பட்டு விட்டாலும் அடிப்படையில் இவை எதுவும் மத, கடவுள் நம்பிக்கை சார்ந்த விசயங்களைப் பற்றி பேசாதவை.

நம்புவதற்கு கடினமாக இருந்தாலும் அதுதான் உண்மை.

காரணம் இவை அனைத்தும் வானியல் கோட்பாடுகளே. விஞ்ஞான விசயங்களே.

விஞ்ஞானம் என்பதே விண் ஞானம் தானே.

உண்மைகளை எங்கே தேடிக் கண்டு பிடிக்க ?

மதஇயல் (அ) இறையியலில் தொன்மக்கதைகள் களைதல் (De-mytholization) என்ற ஒரு பிரிவு உண்டு.

அனைத்து மதங்களிலுமே இருக்கக்கூடிய புனைவுக்கதைகள், அதீத அற்புதங்கள், இயற்கையை மீறிய செயல்பாடுகள், நடைமுறை வாழ்க்கையில் காணமுடியாத ஐதீகங்கள், விசுவாசங்கள், அறிவியல் பூர்வமற்ற, அறிவுக்கொப்பாத கற்பனை செய்திகள், இவை போன்றவைகளை ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பது என்பதைவிட இவற்றுக்கு அடிப்படையாக இருக்கக்கூடிய மூல உண்மைச் செய்திகளை வெளிக்கொணர்ந்தாலே உண்மை வெளிப்பட்டு விடும். கற்பனைக் கதை அடிபட்டுப்போகும்.

அப்படி அடிப்படையாக இருக்க கூடிய உண்மைச் செய்திகளை  கொண்டே இக்கட்டுரை....

தொல் தமிழர்களின் அறிவு மிகப்பெரும் ஆச்சரியம.. தொடர்ந்து தேடுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.