25/07/2018

சொத்து வரியை 50%ல் இருந்து 100% உயர்த்தியது அரசு: அரசாணை வெளியீடு...


சென்னை: சொத்து வரியை 50%ல் இருந்து 100% ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 1998ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

1998ம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்படாததால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் அளிக்கப்பட்டது. இது குறித்த வழக்கு விசாரணையில் தமிழக அரசு முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்றம், சொத்து வரியை உயர்த்த உத்தரவிட்டது. இதையடுத்தே, சொத்து வரியை உயர்த்துவதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணையின்படி, உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் இதுவரை சொத்து வரி 50%ல் இருந்து, இனி 100% ஆக உயர்த்தப்படும்.

மேலும், குடியிருப்புகளுக்கு 50%ம், வாடகை குடியிருப்புகள் மற்றும் குடியிருப்புகள் அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதத்துக்கு மிகாமல் சொத்து வரி விதிக்கப்பட உள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.