25/07/2018

மனிதனும் மரங்களும்...


இந்த இயற்கையின் படைப்பில் மிகவும் மனிதனை ஈர்க்க கூடியது மரங்கள் மட்டுமே..

மரங்களிடம் நாம் தனியாக மரநிழல்களில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது நம்மை அறியாமல் தூக்கம் வரும்.

அது தூக்கம் அல்ல நாம் அந்த மரத்துடன் நமது மனம் இனைந்து அதை உணர்ந்து நமக்கு ஆழ்ந்த சிந்தனையில் உரக்க நிலைக்கு கொண்டு செல்லும் நம்மை மறந்து.

நமது முன்னோர்கள் (பழங்குடி மனிதர்கள்) முதலில் வாழ்ந்தது மரங்களில் மட்டுமே.

அவர்கள் மரத்திடம் பேசும் பண்புகள் கொண்டவர்களாக இருந்தனர்.

நாகரீகம் வளர்ந்து இப்போது  இயற்கையை அறியாமல் இருப்பது மனிதர்கள் மட்டுமே.

மரங்களிடம் பக்கத்தில் சென்று அதை தொட்டு பேசுங்கள் உங்கள் கவலைகள் எல்லாம் மறந்து விடும்.

மரங்களிடம் தினமும் காலை மாலையில் சற்று ஓய்வு எடுங்கள் உங்களுக்கு புத்துணர்ச்சி ஒரு வித மகிழ்ச்சி  ஏற்படும்.

இப்போது மனிதர்களின் வாழ்க்கை எதை நோக்கி செல்கிறது உங்களுக்கே தெரியும்.

இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மரங்களிடம் நேர்மறை எண்ணங்கள் கொண்டு நீங்கள் பேசும் போது அது மிக மகிழ்ச்சியாக வளரும் அது மகிழ்ச்சியாக இருப்பது உங்கள் உணர்வின் மூலம் அறிவீர்கள்.

மரங்களிடம் முதலில் தனியாக அதன் அருகில்  சென்று அதன் வேர் தண்டுவடம் கிளைகள் இலைகள் உற்று நோக்கி  ரசியுங்கள் உங்கள் மனதை அது ஈர்க்கும்.

அதன் பிறகு காலில் செருப்பு இல்லாமல் அதன் மேல் கை வைத்து  அல்லது அதனை தழுவி கொண்டு தினமும் பத்து நிமிடம் அதனிடம் இனையுங்கள் உங்களுக்குள் பல மாற்றங்கள் ஏற்படும்.

மரங்களிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது.. கற்று கொள்ளுங்கள் உங்கள் வாழ்வை இயற்கை சார்ந்து பயனியுங்கள்.

மரங்கள் நமது முன்னோர்கள் வாழ்ந்த இடம்   நம்மை பாதுகாக்கும் பாசமாக முன்னோர்கள் வாழ்ந்த இடத்தை  தினமும் சந்தியுங்கள்.

(உங்களுக்கு பிடித்த மரங்கள்)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.