01/08/2018

சிலுவை யுத்தங்கள் − 11...


முதலாவது சிலுவைப் போர்
(ஹி.491−௧ி.பி.1097)..

பகுதி−1

சிலுவைப் போருக்கான காரணங்களையும் அதன் விளைவுகளையும் கடந்து வந்த பதிவுகளில் பார்த்தோம்.இப்பொழுது தான் தலைப்பினுள் நுழையவே போகின்றோம்.

மேலும், இப்போரில் வரும் சம்பவங்கள் மிகவும் மனிதாபிமானமற்ற வலிதர கூடியதாகும் பலவீனமான இதயம் படைத்தோர் இதை தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்...

இந்தப் படையை பாப்பரசரே நடத்திச் சென்றார்.அதன் தலைமைப் பொறுப்புக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களிடமும் தளபதிகளிடமும் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்,
சேவையாளா்கள் என்போரை மில்லியன் கணக்கில் உள்ளடக்கியிருந்த இப்படையில் பிரஞ்சுக்காரா்களே அதிகமாகக் காணப்பட்டனர்.இதில் 200,000 போர்வீரர்கள் இருந்தனர்.

கி.பி.1096−ம் ஆண்டு கோடை காலத்தில் ஐரோப்பாவின் பல பாகங்களிலிருந்தும் புறப்பட்ட சிலுவை வீரர்களின் குழுக்கள் ஸ்காண்டி நோபிளினூடாக முஸ்லிம் சிற்றரசான ஸல்ஜூக்கிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சின்னாசியாவைச் சென்றடைந்தது.

இவ்வாறு பெரும் படைகளாகத் திரண்டு வந்த சிலுவை வீரா்கள்,போஸ்பெரஸ் அணையைக் கடந்து ஆசியாவினுள் நுழைந்து; ஸல்ஜூக்கிய சுல்தானின் தலைநகரான நிஸிபைனை நோக்கி முன்னேறினர்.

தனித்தனித் தலைவர்களின் கீழ் வந்த இப்படையினர் கி.பி 1097−ல் அந்நகரத்தை முற்றுகையிட்டனர்.அந்த நேரத்தில் ஸல்ஜூக்கிய சுல்தான் "கலீஜ் அர்ஸலான்" தனது இராஜ்ஜியத்தின் கிழக்கு எல்லையில் ஏற்பட்ட குழப்பத்தை அடக்குவதற்காகப் பெரும் படையொன்றை நடாத்திச் சென்றிருந்தார்.

சிலுவை வீரா்கள் அத்துமீறி நுழைவதைக் கேள்வியுற்றதும் உடனே நாட்டுக்குத் திரும்பிய அவர், அவர்களுடன் பெரிய மோதலில் ஈடுபட்டு, ஈடுகொடுக்க முடியாமல் மலைப்பகுதிகளை நோக்கிப் பின்வாங்கினார். பின்பு அங்கு வாழ்ந்த மக்களால் அந்நகரம் உரோம அரசனிடம் ஒப்படைக்ப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அன்தாகியா நகரை நோக்கி சிலுவை வீரா்கள் முன்னேறினர்.சுமார் ஒன்பது மாதகால முற்றுகையின் பின்னர் ஹி.492 (௧ி.பி.1098)ம் ஆண்டு பலாத்காரமாக நாட்டினுள் நுழைந்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து அங்கு 10,000 முஸ்லிம்களைக் கொன்றனர். தொடர்ந்தும் முஸ்லிம்கள் சொல்லொண்ணாத் துன்பங்களை எதிர் கொண்டனர்.

"குடிசை முதல் மாளிகை வரையிலான ஒவ்வொரு இருப்பிடமும் கொலைப்பீடமாக ஆக்கப்பட்டது.சிறிய தெருக்களிலும் பெரிய வீதிகளிலும் மனித இரத்தம் ஆறாக ஓடியது.

அன்தாகியா நகரில் படுகொலை செய்யப்பட்ட மனித உயிர்களின் மிகக் குறைந்த எண்ணிக்கை பத்தாயிாகும்"
என்று வரலாற்றாசிரியர் செய்யத் அமீர் அலி கூறுவது இங்கு கவனிக்கத்தக்கது..

மேலும் பல வரலாற்றுத் தகவல்களுடன் அடுத்தப் பதிவில் தொடர்கிறேன்.

- தொடரும்.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.