01/08/2018

வரலாற்றை புரட்டிய சம்பவம் - 5...


தீட்டுபட்ட குளமும் மாட்டு மூத்திரமும்...

தொடர் பதிவு ஆரம்பத்தில் இருந்து படித்தால் மட்டுமே புரியும்...

தீட்டு பட்ட குளத்தை பரிகாரம் செய்தால் ஒழிய நாம் அதை பயன்படுத்த முடியாது என வீரேஸ்வர் ஆலயத்தில் உயர் மக்கள் என கூறக்கூடிய பார்பனர்கள் வேதபண்டிதர்கள் என்று எல்லாரும் முடிவு செய்து பரிகாரம் செய்வதுதான் சரி என்று முடிவெடுக்கப்பட்டது

அந்த பரிகாரம் என்ன தெரியுமா?

பசுவின் சாணி
பசு மூத்திரம்
தயிர்
மற்றும் தமது வீட்டில் உள்ள சுத்தமான தண்ணீர்  (சுத்தம் என்பது தீண்டதகாதவர்கள் கை வைத்திடாத தண்ணீர்)

எல்லாவற்றையும் கரைத்து குளத்து நீரில் ஊற்றுவது தான் தீட்டு தீர்க்கும் முறை என்று முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி  108 பானைகளில் குளத்து நீரையும் எடுத்துவந்து மேல் உள்ள எல்லாத்தையும் அதில் கொட்டி பிராமண மந்திரங்கள் ஓதி பின்னர் பானையில் உள்ள கரைசலை குளத்தில் கொட்டப்பட்டது.

பின்னர் இனிமேல் இந்த தீண்டாதவர்கள் குடித்த நீரில் தீட்டு நீங்கியது என்று பிரகடனம் செய்யப்பட்டது,

முதலில் தன்டோரா போட்டு ஊர் முழுவதும் தீட்டை கழித்துவிட்டோம் என கூறியுள்ளனர்..

இது மக்களை நிலைகுலையச் செய்தது.

அவர்கள் மனம் வருணிக்க முடியாத அளவுக்கு புண்படுத்திற்று.

கேள்வியுற்ற அம்பேத்கரின் இதயத்தை நோகடித்தது.

கோபம் மேலோங்க..

1927 சூன் 26 தேதி மேடைப்பேச்சில் இதை குறிப்பிட்டு பேசினார்.

அதாவது சாதாரண மக்கள் கை வைத்து குடித்த குளத்தில் தீட்டு என்று மூத்திரத்தையும் சாணத்தையும் கொட்டி அசிங்கப்படுத்திய இவர்கள் மனநோயாளிகளே என பகிரங்கமாக அறிவித்தார்.

இதற்கு இவர்கள் நிச்சயமாக பதில் கூறியே ஆகவேண்டும் என்று கூறிவிட்டு..

இதை இப்படியே விடமுடியாது.

இவர்களுக்கு எதிராக சத்தியாக்கிரகம் செய்தே ஆகவேண்டும் என்று மக்கள் மத்தியில் கடும் கோபத்துடன் கூறிவிட்டார்.

அவ்வளவுதான் மக்கள் ஆரவாரம் காதை கிழித்தது.

இதை நான் செய்தே தீருவேன் அதற்கு முன்பு நான் சட்டத்தை நாடுவேன் என்று முடித்துவிட்டார்.

இப்படியாக சில மாதங்கள் போகிறது.

இறுதியில்  1927 டிசம்பர்  மாதம் 25 ,26
மகத் நகரில் மீண்டும் மாநாடும் கூடவே சத்தியாக்கிரகம் நடக்கும் என்று அறிவித்தார்கள்.

மகத் நகரம் பரபரப்பை பஞ்சமிருக்காது இருந்தது .

தலைவர்கள் வேத விற்பன்னர்கள் எல்லாரும் வருவதும் போவதுமாகவே இருந்துள்ளனர்.

இந்த தடவை சரியாக திட்டம் தீட்டினார் அம்பேத்கர்,

நவம்பர் மாதம்  27 ம் தேதி சாமியார்கள் மடாதிபதிகள்  மகத் நகரில் ஆலோசனை கூட்டம் நடந்தது

ஷூத்திரர்களை எப்படி அடக்குவது என்று விவாதித்துள்ளனர்.

இதை கேள்விப்பட்ட மாவட்ட குற்றவியல் நடுவர்  டிசம்பர் மாதம்  7 தேதி மகத் நகருக்கு போலிஸ் படையுடன் வருகிறார்.

இரு தரப்பினரிடமும் பேசுகிறார்..

பார்பனர்கள் வேறு திட்டம் வைத்துள்ளனர்.

வெகுஜன மக்களோ நாங்கள் அம்பேத்கர் பேச்சுக்கு மட்டுமே மதிப்பளிப்போம் தயவுசெய்து எங்களிடம் பேச வேண்டாம்.

இது எங்கள் உரிமைக்கான போராட்டம் எனக் கூறி அனுப்பிவிட்டனர்.

இந்த நிலையில் தான் பிராமணர்கள் திட்டம் தீட்டியது போல்..

நீதிமன்றத்தில் ஒரு வழக்கை போடுகின்றனர்.

அதில் பெரும் மதிப்புமிக்க நபரான திவாகர் ஜோஷி என்ற நபருக்கு சொந்தமான குளத்தில் நூற்றுக்கணக்கான தீண்டதகாதவர்கள் திடீரென குளத்தில் இறங்கி குளத்தை மாசுபடுத்திவிட்டனர்.

இதன் காரணமாக எனது மனம் மிகுந்த துன்பம் கண்டுள்ளது.

அதோடு இல்லாமல் மீண்டும் எமது குளத்தை சுற்றி வளம் வருகின்றனர்.

இது எனக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மீண்டும் மாநாடு நடத்தி அம்பேத்கர் கலவரத்தை தூண்ட பார்கிறார்.

மீண்டும் இப்படி எனது குளம் தீட்டப்படுத்தினாள்.

மனுஸ்மிருதிப்படி பரிகாரம் செய்ய வேண்டும்.

பரிகாரம் செய்யும் காலம்  24 மணிநேரம் இந்த  24 மணிநேரமும் நானும் எனது சார்ந்த சமுதாயமும் தீட்டுபட்ட நீரை அருந்துவது மனுஸ்மிருதிப்படி குற்றம் ஆகவே உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில்
கூறப்பட்டுள்ளது...

ஜீ வி வைத்யா என்ற நீதிபதி கீழ்க்கண்டவாறு உத்தரவிட்டார்..

அதன் படி தனியாருக்கு சொந்தமான குளத்தில் அவர் யாருக்கு விருப்பம் உள்ளதோ அவருக்கு தான் தண்ணீரை கொடுப்பார் இது அவரது உரிமை இதில் மற்றவர்கள் பங்கு கேட்க முடியாது என்று தீர்ப்பு வழங்கினார்.

இப்போது அம்பேத்கர் சத்தியாகிரகம் செய்யும் ஏற்பாட்டையும் பெரும் மாநாடு நடத்துவது என்ற ஏற்பாட்டையும் செய்துக்கொண்டு இருந்த அவருக்கு அரசாங்கம் தற்காலிகமாக தீண்டதகாதவர்கள் குளத்தில் இறங்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது அவர் காதுக்கு வருகிறது.

ஏற்கனவே கோபத்துடன் இருந்த அம்பேத்கர் அடுத்து எடுத்த முடிவு உலக வரலாறு மறந்து விட்ட ஒன்று.

இவர்கள் செய்த மிகப்பெரிய தவறு வழக்கில் மனுஸ்மிருதியை
சேர்த்தது தான்.

என்ன ஆனது ?

நம்பமுடியாத நிகழ்வை செய்தார் அம்பேத்கர்,

பேசுவோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.