15/09/2018

சாரிடான் உள்ளிட்ட 328 மருந்து வகைகளுக்குத் தடை...


சாரிடான் உள்ளிட்ட 328 மருந்து வகைகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது...

பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம்(Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரணிகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதையடுத்து கடந்த 2016ம் ஆண்டு 344 மருந்துகளுக்கும், அதன் பின்னர் 5 மருந்துகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகின. இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனைக் கமிட்டியின் ஆய்வுக்கு மருந்து வகைகளை உட்படுத்துமாறு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், 328 மருந்துகள் தயாரிப்பு, விற்பனை, விநியோகத்திற்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.