18/09/2018

போக நாதர் நூல்களின் விவரம்....


தமிழ் கடவுளான பழநி தண்டாயுத பாணியை வழிபட்ட போகர். தற்போது பழநியில் அருள்பாலிக்கும் தண்டாயுத பாணியின் சிலையினை நவபாசானம் என்கிற ஒன்பது விஷங்களினால் ஆன கூட்டுக் கலவையினால் உருவாக்கியவர் இவர்.

போகர் ஆகாய மார்க்கமாக செல்லக் கூடிய ஊர்தியை உருவாக்கி சீன தேசம் சென்றதாகவும், அங்கு போதிக்கும் பணியை மேற்கொண்ட போகருக்கு சீனாவில் "போ-யாங்" என்ற பெயர் வழங்கப் பாட்டதாகவும் சொல்லப் படுகிறது.

இவர் கைலாய மலை அருகே தங்கி இருந்த காலத்தில் எழுதிய ஏழாயிரம் பாடல்கள் தான் பின்னாளில் போகர் சப்த்த காண்டம் என்று அழைக்கப் படுகிறதாம்.

இது தவிர.

போகர் 12000
போகர் நிகண்டு 1700
போகர் வைத்தியம் 1000
போகர் வைத்தியம் 700
போகர் சரக்கு வைப்பு 800
போகர் ஜெனன சாகரம் 550
போகர் கற்பம் 360
போகர் கற்பம் 300
போகர் உபதேசம் 150
போகர் இரண வாகடம் 100
போகர் நானா சாராம்சம் 100
போகர் கற்ப சூத்திரம் 54
போகர் வைத்திய சூத்திரம் 77
போகர் மூப்பு சூத்திரம் 51
போகர் ஞான சூத்திரம் 37
போகர் அட்டாங்க யோகம் 24
போகர் பூஜா விதி 20
போகர் மாந்திரீகம் 74
போகர் மலை வாகடம்
போகர் வாலை ஞான பூஜாவிதி
போகர் வர்ம சூத்திரம்
போகர் பஞ்ச பட்சி சாஸ்திரம்

இப்படி கணக்கில்லா நூல்களை இயற்றியதாக கூறப்படுகிறது.

பழுத்த ஞானியான போகர் இறுதியாக வந்து தங்கிய இடம்தான் பழநி. தற்போது பழநி கோவில் வளாகத்திலேயே அவருடைய சமாதி இருக்கிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.