HEADLESS CHICKEN MONSTER...
சமீபத்தில் ஆராச்சியாளர்கள் ஆழ் கடலில் வினோதமான உயிரினத்தை கண்டறிந்துள்ளனர். இதை HEADLESS CHICKEN MONSTER என குறிப்பிடுகின்றனர். இந்த உயிரினம் அண்டார்டிக்காவின் ஆழ் கடலில் நீந்தி கொண்டிருந்ததை கண்டு பிடித்துள்ளனர்.
தலை இல்லாமால் காணப்படும் இது கடல் வெள்ளரி. இதன் அறிவியல் பெயர் Enypniastes eximia.
இது தலை இல்லாமல் காணப்படுவதன் மட்டுமில்லாமல் வித்தியாசமான உடல் அமைப்பை கொண்டுள்ளது. இதன் உடல் ஒளி புகும் தன்மை கொடுத்தால் இதன் உடல் உள்ளுறுப்புகள் வெளியில் தெரிகின்றன. இது ஆழ்கடல் பகுதியில் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இதன் அளவு 9 இன்ச். முதன் முதலில் மெக்ஸிகோ வளைகுடாவில் இது கண்டுபிடிக்கப்பட்டது. அண்டார்டிக் பகுதியில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் இதை படம் பிடித்தனர்.
தெற்கு கடல் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டது இதுவே முதன் முறை என்று தெரிவித்துள்ளனர்.
இதை பற்றி கில்லியன் ஸ்லோக்ம் வெளியிட்டுள்ள அறிக்கை கடல் பகுதி பல்வேறு வித்தியாசமான மற்றும் பலவகையான உயிரினங்களுக்கு வீடாக உள்ளது.
இதை எதிர்காலத்திற்காக பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்கின்றன.
இது போன்ற உயிரினங்களை இதற்கு முன் பார்த்ததில்லை என டர்க் டர்க் வெல்சிபோர்ட தெரிவித்துள்ளார். இவர் தான் இந்த ஆராய்ச்சி குழுவின் தலைவர். விண்வெளியை ஆராய்ந்த அளவிற்க்கு நாம் ஆழ்கடலை பற்றி தெரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மை.
Video - http://bit.ly/2Pd2nBl

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.