28/10/2018

THE DARK SIDE OF CHOCOLATE - இனிப்பின் கசப்பான பின்னனி...


உலகில் அதிகம் மக்களினால் விரும்பி உண்ணப்படும் சுவையான பண்டங்களில் “Chocolate” முக்கிய இடத்தை வகிக்கின்றது.

குழந்தைகளினால் அதிகம் சுவைத்து உண்ணப்படும் இந்த சாக்லேட் இன் பின்னணியில் கசப்பானதொரு உண்மையும் மறைந்துள்ளது.

உலகின் “சாக்லேட்” தேவைகளை 36% நிறைவு செய்யக் கூடிய கோட்டிவார் பகுதியின் மலைக்காடுகளில் 2010 ஆம் ஆண்டு பயணம் செய்த ஆவணப்பட இயக்குனர்கள் “Roberto romano” மற்றும் “Miki Mistrati” அங்கு கண்ட காட்சி அதிர்ச்சியூட்டியது.

அந்தக் காடுகள் முழுவதும் ( 5 முதல்  11 வயதிற்குட்டபட்டவர்கள் ) ஏறத்தாழ 1.8 மில்லியன் ஆபிரிக்க குழந்தைத் தொழிலாளர்கள் அடிமைகளாக அக் காடுகள் முழுவதும் பணி புரிவதைக் கண்டு உடனே தன் கேமராவைக் கொண்டு “THE DARK SIDE OF CHOCOLATE” எனும் ஆவணப்படத்தை தயார் செய்து பல நெஞ்சை உருக்கும் சம்பவங்களோடு உண்மையை உலகிற்கு வெளிக்கொணர்ந்தார்கள்

பிரபலம் வாய்ந்த சாக்லேட் கம்பனிகளான “Hershey’s”, “m&m” மற்றும் “Nestle” கம்பனிகளின் ஆதிக்கத்தின் கீழ் 13 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள சாக்லேட் நிறுவனங்கள் காணப்படுகின்றன. இந்த தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திக்கான கொக்கோவை கோட்டிவார் பகுதிகளிலேயே பெற்று கொள்கின்றன.

இந்த ஆவணப்படம் வெளியான பின்பு இயக்குனர் மிக்கி மிஸ்ட்ராடியினால்  சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள சர்வதேச தொழிலாளர் அமைப்பில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டு காட்டப்பட்டது. நெஸ்லே மற்றும் சில கம்பனிகளுக்கு இதை பார்வையிடவும் அதைப்பற்றிய வினாக்களுக்கு விடையளிக்கும் பொருட்டு அனுப்பப்பட்ட அழைப்பிதழை இக் கம்பனிகள் நிராகரித்தனர். இதையடுத்து மிக்கி மிஸ்ட்ராடி அதற்கடுத்த நாள் நெஸ்லே கம்பெனி அருகே இந்த ஆவணப்படத்தை திரையிட்டு அந்த நிறுவனத்தில் பணி புரியும் அனைத்து தொழிலாளர்களுக்கும் காண்பிக்க முயலும் போது நெஸ்லே கம்பெனி நிறுவனத்தினர் போலீஸ் அதிகாரிகளோடு வந்து அவரது முயற்சியைதடுத்து நிறுத்தினர்.

வலிகள் பல நிறைந்த இந்த ஆவணப்படத்தில் பல குழந்தை தொழிலாளர்களின் கசப்பான அனுபவங்கள் பதியப்பட்டுள்ளன.

இதனிடையே சிறுவர் உரிமைகள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு என சுற்றி திரியும் ஐநாவும் மனித உரிமைகளும் மௌனம் காத்தமை கேள்விக்குரியதொன்றே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.