இராமாயணம் மிகப் பழைய இதிகாசமாகும். இதன் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கும் - கிபி 5 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலமாகும்.
பெருவில் உள்ள நாஸ்கா கோடுகள் 500 கி.மு. மற்றும் கி.பி. 500 க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் நாஸ்க்கா சமூகத்தினரால் வரையப்பட்டது.
இதில் இரண்டு கால்பந்தாட்ட மைதானங்கள் அளவிற்கு உள்ள இடத்தில் ஒரு குரங்கு வரையப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் ஆரம்பிக்கும் கோடு சிறிய காதுகள், தலை, கால்கள், அளவான உடல், ஆறேழு சுற்று சுற்றிய வால் என சீராக வரையப்பட்டு ஆரம்பித்த இடத்திலேயே முடிகிறது.
இந்த நாஸ்கா மக்கள் வரைந்த குரங்கிற்க்கும், இராமாயண ஆஞ்சநேயருக்கும் ஏதும் தொடர்புண்டா?
இங்கு ஒரு வேதவசனம்:
“கோளங்களும், பூமியும் (ஆரம்பத்தில்) ஒரே துண்டாக (ஒன்றாக)த்தான் இருந்தன. பிற்பாடு நாம் அவற்றைத் தனித்தனியாகப் பிரித்தோம்” (திருக்குர்ஆன்-21:30)
அன்றைய காலகட்டத்தில் பூமியின் நிலப்பரப்புகள் ஒன்றாக இருந்ததை, நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். முதலில் ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை மலையை தேடி உலகம் முழுவதும் சுற்றியதாகவே கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன என்றதான் கூறப்படுகிறது.
ஆனால் சஞ்சீவி மலையின் இருப்பிடம் இமையமலை என்று கூறினாலும் இதில் சில முரண்பாடுகள் உள்ளது. எனவே அந்த மலையின் சரியான இடம் தெரியவில்லை.
மேலும் நாஸ்கா மக்கள் வரைந்த அந்த குரங்கின் கைகளை பார்த்தால், எதையோ கையில் ஏந்துவை போன்றுதான் உள்ளது.
இந்த நாஸ்கா கோடுகள் ஆரம்பத்தில் நட்சத்திர மண்டலங்கள் அல்லது சூரிய சக்தியுடன் இணைந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்டன, ஆனால் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நாஸ்கா கோடுகள் தண்ணீர் மற்றும் கருவுறுதலுடன் தொடர்புடைய சடங்கு அல்லது சடங்கு தளங்களை சுட்டிக்காட்டுகின்றன. என்றும் காற்றிலிருந்து கண்டவற்றையும் கூடுதலாக, வரைந்தனர் என்றும் வெளிப்படுகிறது.
அவ்வாறு வரைந்ததே குரங்கு ஆஞ்சநேயர் உருவமாக இருக்கலாம்.
இது யுகமாக கூட இருக்கலாம், ஆனால் காலமும், கலையும் இதில் உடன்பாடு உள்ளது என்றே காட்டுகிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.