நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன். ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் யாரும் எனக்கு எதையும் கற்றுத் தருவதில்லை என்று சிலர் புலம்புகிறார்கள்.
அவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்...
உங்களுக்கு யாரும் எதையும் கற்றுத் தரமாட்டார்கள். நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம்.
யாரும் உங்களுக்கு எதையும் ஊட்டமாட்டார்கள். ஆனால், நீங்களாக எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்துச் சாப்பிடலாம். யாரும் தடுக்க முடியாது.
நீங்கள் வேறு ஒருவரை சார்ந்து சென்று முன்னேற நினைத்தாலும் வீண் தான்..
ஏனெனில் அவர்களை விட மேலே நீங்கள் முன்னேறி விடுவீர்கள் என்ற பொறாமையில் உங்களுக்கு உதவி செய்வதை போல் நடிப்பார்களே தவிர.. உண்மையில் உதவி செய்ய மாட்டார்கள்...
எப்போதும் அவர்களுக்கு கீழ்.. அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவே எண்ணுவார்கள்...
தலைவராவது எப்படி என்று காந்திஜிக்கு யாராவது வகுப்பு நடத்தினார்களா?
இராணுவம் அமைப்பது எப்படி என்று நேதாஜிக்கு யாராவது சொல்லிக் கொடுத்தார்களா?
கற்றுத் தரமாட்டார்கள்… நீங்களாகக் கற்றுக் கொள்ளுங்கள்.
நீங்களாகவே உங்களுக்கான பாதையை உருவாக்கி செல்லுங்கள்...
இதுதான் முன்னேற்றத்தின் மூலமந்திரம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.