11/11/2018

சூயஸ் கால்வாய் வெட்டப்படாத காலம் அது, கி.பி ஆறாம் நூற்றாண்டு...


தமிழக வணிகர்களான நகரத்தார்கள், அதாவது சாத்தன்கள்  இந்நாட்டில் உற்பத்தியான பொருட்களை அரேபிய தீபகற்பம் மற்றும் தென் எகிப்து  வரைதான் கடலில் எடுத்துச் செல்வார்கள்.

அங்கிருந்து மத்திய ஆசியாவுக்கும் பாலைவன நாடுகளுக்கும் ஒட்டகங்கள் மற்றும் குதிரைகளில் தான்  சரக்குகளை எடுத்துச் செல்ல முடியும்.

ஐரோப்பாவுக்குச் செல்ல மெடிட்டரேனியன் கடலில் செல்ல வேண்டும் என்பதால் தென் எகிப்திலிருந்து  சரக்குகளை எடுத்துச் சென்று வட எகிப்தின் துறைமுக நகரான அலக்சான்டிரியா வரை  ஒட்டகங்களில் சேர்ப்பார்கள்.

அங்கிருந்து சரக்குகள் வேறொரு கப்பலுக்கு ஏற்றப்படும். அலக்சான்டிரியாவில் இருந்து கிரேக்க மற்றும் ரோமன் நாடுகளுக்கு நம்ம ஊர் உற்பத்திகளான பட்டு, சந்தணம், முத்து, யானைத் தந்தம், குறு மிளகு போன்றவை செல்லும்.

நகரத்தார்களுக்கு  கப்பல் - கப்பல் சரக்கை மாற்றிவிடுவதற்கும் , பாலைவன நாடுகளில் கொண்டு சரக்கை விற்கவும் சில  அரபிகளும், யூதர்களும்  இடைத்தரகர்களாக நியமிக்கப்பட்டார்கள்.( employees under sathan)

இந்த வணிகம் காலம் காலமாக நடந்து வந்தது.

 மெக்கா,டமாஸ்கஸ்,எருசலம் போன்ற நகரங்கள் புகழ் பெற்ற வணிகப் பேட்டைகள் ஆவை.

நகரத்தார்களின் வங்கி சம்மந்தமான தொழிலையும் வட்டிக்கு விடுவதையும் யூதர்கள்  ( எருசலம் முதல் ஐரோப்பா வரை)   பார்த்துக் கொண்டார்கள்.

அரபு பாலைவனத்தில் சரக்குகளை எடுத்துச் செல்லும் பொறுப்பை அரபிகள் பார்த்துக் கொண்டனர். குறிப்பாக குரேஷி என்ற அரபுக்குடி சாத்தன்களிடம் வேலை பார்த்தனர்.

முகமது பின் அப்துல்லா (நபி) என்ற சிறுவன் தனது இளம் வயதில் அனாதையாதால் வணிகரான தனது சித்தப்பா அபு தாலிபிடம் வளர்கிறார்.

அபு தாலிப் என்பவர் மெக்கா முதல் சிரியா வரை சென்று வணிகம் செய்பவர் ஆவார்.இவரிடம் இருந்து தான் நபி வணிகத்தைக் கற்றுக் கொண்டார்.இசுலாமுக்கு முன்பு எந்த மதத்தைக் கடைப்பிடித்தார் என்பது தெரியவில்லை.

ஆனால்   தமிழகத்து சாத்தன்களுக்கு எதிராக அரபிகளைத் திரட்டி , ஏற்கனவே அரபு பாலைவனங்களில் வழக்கத்தில் இருந்த அபிரகாமிய மத வழக்கங்களையும் சேர்த்து இசுலாம் என்ற மதத்தைத் தோற்றுவித்தவர் இவரே.

வட்டிக்கு விட்டுத்தான் சாத்தன்கள் வயிறு வளர்க்கிறார்கள் என்று உணர்ந்தவர் இசுலாமில் வட்டியைத் தடை செய்தார். வட்டிக்கு விடும் இடைத்தரகர்களான யூதர்களை எதிரி என்றார்.

சாத்தன்களுக்கு எதிராக ஒரு புதிய வழிபாட்டு யுக்தியையும் இசுலாம் என்ற மார்கத்துக்குள் கொண்டு வந்துவிட்டார்.    இதனை செயல்படுத்த  அக்காலத் தமிழகத்தில் இருந்து ஒருவரின் உதவி கிடைத்தது என்ற ஐயமும் எனக்கு உள்ளது.

இசுலாம் என்ன செய்தது?

அரேபியா முதல் எகிப்து வரை இருந்த வணிகப் பாதையை தன் வசப்படுத்தியது.

சாத்தன்களுக்கு பின்னடவையை ஏற்படுத்தியது.

மெக்காவில் சாத்தனைக் கல்லால் அடிக்கும் சடங்கும் உருவாக்கப்பட்டது.

இசுலாமிய ஆண்களின் வெள்ளை உடை, தலைப்பாகை ,மெக்காவில் மொட்டை அடிப்பது என அனைத்தும் அக்கால சமண வணிகர்களின் வழக்கம் தான்.( சுன்னத் செய்யும் வழக்கம் ஏற்கனவே அந்நிலப் பகுதியில் வழக்கத்தில் இருந்தது தான்)

எகிப்து நாடும் அதன் வணிகமும் அரபிகளிடம் சென்றதாலும், ஐரோப்பியாவிற்கு இனிமேல் ஆப்பிரிக்காவைச் சுற்றி கடலில் செல்ல முடியாது என்பதாலும்  சாத்தன்களின் கவனம் தென் கிழக்காசியா பக்கம் திரும்பியது.

தமிழகத்தில் இதே காலகட்டத்தில் சைவத்தை வளர்த்தார் காரைக்கால் அம்மையார் என்ற செட்டியார் மதர்.

சைவத்துக்கு முன் பௌத்தர்களாக இருந்த கடல் சாத்தன்கள், பிற்காலத்தில் பர்மா,இலங்கை,கடாரம்,சிங்கப்பூர் என எங்கு சென்றாலும் சைவ அடையாளத்தோடு சென்றனர். சென்ற இடமெல்லாம் முருகள் கோவில் கட்டி வட்டிக்கு விட்டு வயிறு வளர்த்தனர்.

சரி இப்ப மேட்டருக்கு வருவோம்.

ஆப்பிரிக்காவை சுற்றி கடல் வழியாக ஐரோப்பியர்கள் வந்த நோக்கம்?

வேறு எதற்கு?? சாத்தன்களைத் தேடிக் கருவருக்க தமிழகம் வரை வந்துவிட்ட முஸ்லீம்களை இந்தியாவை விட்டு விரட்டத்தான்!! வரவைத்தவன் நகரத்தான்.

மீண்டும் கடல் வணிகத்தை வலுப்படுத்த சூயஸ் கால்வாயை வெட்டினர் ஆங்கிலேயர். வெட்ட காசு கொடுத்தவர் ஒரு கானாடுகாத்தான் செட்டியார்.

அடுத்து என்ன நடந்தது என உங்களுக்குத் தெரியாதா?

அரபிகளை அடக்க தங்களது பழைய விசுவாசிகளாக யூதர்களை மீண்டும் எருசலத்தில் குடியமர்த்தினர் செட்டிகள்.

முஸ்லீம் vs செட்டி சண்டை இன்று வரை தொடர்ந்து வருகிறது. இனியும் தொடரும்.

இயற்கையன்னையே துணை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.