11/11/2018

நைட்டி அணிந்தால் பெண்களுக்கு அபராதம்.. ஆந்திராவில் ஒரு விசித்திர கிராமம்...


ஆந்திராவின் தொகலப்பள்ளி கிராமத்தில் 9 பேர் கொண்ட ஊர் பெரியவர்கள் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக பின்பற்றப்படும் இந்த நடைமுறை தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுவரை இந்த விதியை மீறிய 1,800 பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பகலில் நைட்டி அணிந்தால் ரூ.2000 அபராதமும், அவ்வாறு அணியும் பெண்களை கண்டுபிடித்து தகவல் அளித்தால் ரூ.1000 பரிசும் வழங்கப்பட்டு வருகிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கட்டாயமாக நைட்டி அணியக் கூடாது. இந்த உத்தரவை தொடர்ந்து மீறுவோர் ஊரை விட்டு ஒதுக்கி வைப்படுவார்கள் என்ற உத்தரவும் உள்ளது. அந்த நடைமுறை குறித்து அரசு அதிகாரிகள் யாருக்கும் தகவல் தெரிவிக்கக் கூடாது என்ற ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் இந்த கிராமத்தில் ஆய்விற்காக வருவாய் துறை அதிகாரிகள் சென்ற போது தான் இப்படி ஒரு கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஊர் கூட்டம் போட்டு இந்த கட்டுப்பாடு முடிவு செய்யப்பட்டதாகவும், கடைபிடிக்காவிட்டால் ஊரை விட்டு ஒதுக்கி வைத்து விடுவதாக கூறப்படுவது உண்மையில்லை எனவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.