29/11/2018

அதிர்வலைகள்...


இந்த பிரபஞ்சமே ஒரு உடல் போல் பல உறுப்புக்கள் ஒற்றுமையுடன் இயங்கும் ஒரு உயிருள்ள ஓர்  உடல்.  இதில் எதுவும் தனியாக இல்லை, எல்லாமே ஒன்றுடன் ஓன்று தொடர்பு கொண்டது, எதுவும் தனித்தில்லை.

ஓவ்வொரு மனிதனும் தனியே நிற்கும் தனித்தீவு என்று யாரும் தவறாக கருதிவிட கூடாது. ஒவ்வொருவரும், மற்றவர்களை மற்றவற்றை பாதிக்கவே செய்கிறார்கள்.

சாலையில், ஓரு கல்லை கடந்து போகையில் தெரு ஓரத்தில் கிடக்கும் அந்த கல், தன் அதிர்வுகளை உங்களை நோக்கி வீசும். மலர்களும் கூட, தம் அதிர்வுகளை வீசவே செய்கிறது. நீங்களும் சும்மா கடந்து போய்க் கொண்டிருக்கவில்லை.

நீங்களும் உங்கள் அதிர்வுகளை வீசிக் கொண்டேதான் போகிறீர்கள்.

நிலவின் தாக்கம் அனைவரும் அறிந்ததே ஆனால் அவைகள் நம்மாலும் பாதிப்புகளை அடைகின்றன.

ஏனெனில் இந்த பிரபஞ்சமே ஒரு உடல் போல்தான் அதில் நாம் ஒருவகையான  சிறு உறுப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.