29/11/2018

ராயல் என்பில்டு கோவில்...


ஓம் பன்னா, ஒரு இருசக்கர வாகன காதலர். தேர்தல் காரணமாக தனது புல்லட் பைக்கில் மக்களை சந்திக்க தனது ஊருக்கு செல்லும் வழியில் துரதிருஷ்டவசமான விபத்து ஒன்றில் காலமானார்.

பின்னர் காவல்துறையினர் வாகனத்தை கைப்பற்றி காவல்நிலையத்தில் வைத்தபோது, அடுத்த நாள் காலையில் அது காணாமல் போயிருந்தது. ஒரு சில தேடல்களுக்குப் பிறகு, அதே விபத்து தளத்தில் வாகனத்தை கண்டனர்.  மீண்டும் காவல் நிலையத்தில் வைத்தபோதும், இதே சம்பவம் மீண்டும் மீண்டும் தொடர்ந்தது.

இதனால் காவல் துறையினர், வாகனத்தை அவர் வாழ்ந்த ஊர் மக்களிடமே ஒப்படைத்தனர். அவர்களும் அதன் உரிமையாளர் அங்கேயே சவாரி செய்கிறார் என்று நம்பினர். எனவே, அவர்  நினைவிடத்தில் ஒரு கோவில் கட்டியிருக்கிறார்கள்,

அங்கு அவர் மக்களை விபத்திலிருந்து தடுக்கும் காவல் தெய்வமாக  விளங்குவதாக நம்பினர். ஏனென்றால் அந்த குறிப்பிட்ட இடத்தில், அங்கு எந்தவித இருசக்கர வாகன விபத்துகள் நடக்கவில்லையாம்.

மற்றொரு சுவாரஸ்யமான விசயம், பக்தர்கள் அவருக்கு புல்லட் பீர் வைத்து வணங்குகிறார்கள். ராஜஸ்தானில் பாலி நகரத்திற்கு 20 கி.மீ. தொலைவில் இந்த இருகச்கர வாகன ஓட்டிகளின் குலதெய்வ கோவில் அமைந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.