கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் 541 என்ற விமானம் 103 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது விமானம் மீது தண்ணீர் டேங்கர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் வயிற்றுப்பகுதி என்று சொல்லப்படும் நடுப்பகுதி சேதம் அடைந்தது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில், பயணிகள் யாருக்கும் எந்த வித சேதமும் ஏற்படவில்லை. விபத்துக்குள்ளான விமானம் உடனடியாக, பழுது பார்ப்பதற்காக புறப்பாடு பகுதியில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டது. விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக விமான போக்குவரத்து இயக்குநரகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.