03/11/2018

தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களின் வாடகை நிலுவை விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது...


தஞ்சை மாவட்டம் பந்தநல்லூரில் உள்ள மாரியம்மன் கோயில் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத்துறை முறையாக நடத்தவில்லை என்று சென்னையைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது,  கோயில் சொத்துக்கள் மூலம் 24 கோடி ரூபாய் வாடகை நிலுவையில் உள்ளதாகவும், இதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படாததோடு, கோயிலில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் மனுதாரர் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து,  மனுவுக்கு பதில் அளிப்பதோடு, தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில் நிலங்களிலிருந்தும் வர வேண்டிய வாடகை நிலுவை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு  விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.