18/11/2018

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் நாடு முழுவதும் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஒரு கோடி பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது...


சர வெடிகளுக்கு தடை, பசுமை வெடி உற்பத்தி, பட்டாசுகள் தயாரிக்க பெரிதும் பயன்படும் பேரியத்திற்கு தடை  என அடுத்தடுத்த உத்தரவுகளை பட்டாசு தொழிலுக்கு உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் பட்டாசு உற்பத்திகள்  இனி நடைபெற வேண்டும் என அனைத்து பட்டாசு ஆலைகளுக்கும் மத்திய பெட்ரோலியம் மற்றும் வெடி பொருட்கள் கட்டுப்பாட்டுத் துறை ( பெசோ) சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

காற்று மாசு கொடுமையால் ஏற்படும் தீமைகளிலிருந்து மக்களை காக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை வரவேற்கும்  அதே வேளையில் அத்தீர்ப்பின் மூலம் தங்களின் வாழ்வாதாரத்தையே இழந்து நிற்கும் ஒருகோடி ஏழை மற்றும் கீழ்தட்டு தொழலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களின் வாழ்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்கிற உண்மையையும் சுய ஆட்சி கட்சி உணர்ந்துள்ளது

1960 களின் கடைசியில் மேற்கு வங்கத்தில் கைரிக்சா தொழிலுக்கு மாற்றாக ஆட்டோ ரிக்சா தொழிலை அறிமுகப்படுத்திய போது, பெருமளவுக்கு அத்தொழிலாளர் பாதிக்கப்பட்டனர். ஆனால் மேற்குவங்க அரசு, அத்தொழிலாளர்களுக்கு வேறு தொழிலுக்கு மாறுவதற்கான பயிற்சியும் மற்றும் பொருளாதார உதவி மற்றும் நிவாரணம் கொடுத்ததுபோல் பட்டாசு தொழிற்சாலை மூடப்படுவதால் பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு, நிவாரணமும் மாற்றுத் தொழிலுக்கான பயிற்சிக்கான ஏற்பாடுகளும் செய்ய வேண்டும் என்று சுயஆட்சி இந்தியா கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் உச்ச நீதிமன்றமே கோடிட்டுக் காட்டிய பசுமை பட்டாசுகள் குறித்து மேற்கொண்டு தகவல்கள் திரட்டி பசுமை பட்டாசு தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்படும் தொழிலாளிகள் வாழ்வு பாதுகாப்பு பெற  தமிழக அரசு உடனடியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் நாடு சுய ஆட்சி இந்தியா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது .

கே. பாலகிருஷ்ணன்,மாநிலத் தலைவர்
செல்: 94446 27827

எஸ். எரோணிமுஸ், மாநில பொது செயலாளர், செல்:94431 91787

சுய ஆட்சி இந்தியா, தமிழ் நாடு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.