15/11/2018

மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்...


மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.

விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோ மீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்..

மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

இதயத் தசைகள் வலுவாக்குகிறது. இதயம் சுருங்கி விரியும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.