17/12/2018

பாஜக வின் போலி புகைப்படங்களுக்கு முடிவே இல்லையா?


பா.ஜ.கவின் தேசியச் செயலர் திரு. எச். ராஜா அவர்கள் ராம்பிரசாத் சுப்பிரமணியன் என்பவருடைய பதிவை தன்னுடைய டைம்லைனில் பகிர்ந்திருக்கிறார். அதில் காங்கிரசில் முதல்வரைத் தேர்வுசெய்வதற்காக நடந்த கலவரம் என்று கூறி ஒரு படம் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

உண்மையில் அந்தப் படம் 2017 செப்டம்பரில் ஹரியானாவில் நடந்த ஒரு கலவரத்தின்போது எடுக்கப்பட்ட படம். தேசா சச்சா சவுதாவின் தலைவர் ராம் ரஹீம் சிங் ஒரு பலாத்கார வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டபோது கலவரம் வெடித்தது.

கலவரம் செய்தவர்கள் குறித்த புகைப்படத்தை ஹரியானா காவல்துறை வெளியிட்டது. அதில் ஒரு படம்தான் இது. அப்போது ஹரியானாவில் ஆட்சியில் இருந்தது பா.ஜ.கவின் மனோகர்லால் கட்டர்.

பா.ஜ.க. ஆண்ட மாநிலத்தில், ஒரு பலாத்கார சாமியாருக்காக நடந்த ஒரு கலவரத்தில் எடுக்கப்பட்ட படத்தை, காங்கிரஸ் முதல்வர்களைத் தேர்வுசெய்யும்போது இத்தாலிய அடிமைகள் நடத்திய கலவரம் என்று கூறி  ஒரு தேசியத் தலைவர் பகிர்கிறார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.